கோயம்புத்தூர்: துபாயில் நடைபெற உள்ள ஆசிய அளவிலான யோகா போட்டியில் தேர்வு செய்வதற்கான தமிழ்நாடு மாநில யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவையில் நடைபெற்றன. எதிர்வரும் மே 8 ஆம் தேதியன்று, துபாயில் ஆசிய அளவிலான யோகா போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த யோகா போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்வதற்கான தமிழ்நாடு மாநில யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவையில் நடைபெற்றன.
கோவை பிரணா யோகா மையத்தில் நடைபெற்ற இந்த போட்டிகளில், கோவை ஓசோன் யோகா மையம், சுப்ரா யோகா மையம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் போட்டியாளர்கள் கலந்துக் கொண்டனர். மூன்று வயது முதல் 60 வயது வரையிலான போட்டியாளர்கள் இந்த போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
ஜூனியர், சப் ஜூனியர்,சீனியர், சூப்பர் சீனியர் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் இந்த யோகா மையத்தில் நடைபெற்றன. பல்வேறு பிரிவிகளில் கலந்துக் கொண்ட போட்டியாளர்கள் சிரசாசனம், சக்ராசனம், திரிகோண ஆசனம், பத்மாசனம், வஜ்ராசனம் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆசனங்கள் செய்து அசத்தினார்கள்.
மேலும் படிக்க | இடைத்தேர்தலே வேணாம்... நோ யூஸ் - மீண்டும் மீண்டும் சொல்லும் அன்புமணி ராமதாஸ்
கோவையில் நடைபெற்ற இந்த யோகா போட்டிகளின் நடுவர்களாக பணியாற்றிய ஓசோன் யோகா மைய நிறுவனர் மறைந்த பத்மஸ்ரீ நானம்மாள் பாட்டியின் மகனான பாலகிருஷ்ணன், பிரணா யோகா மையத்தின் நிறுவனர்கள் ஜெயலட்சுமி மற்றும் மோகன் ராஜ், சுப்ரா யோகா மையத்தின் சுப்ரமணியம் ஆகியோர், சிறந்த யோகாசனம் செய்தவர்களை தேர்வு செய்தனர்.
தேர்வு செய்யப்பட்ட வெற்றியாளர்கள், மே மாதம் துபாயில் நடைபெற உள்ள ஆசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள். இதனைத் தொடர்ந்து உலக யோகா தினத்தன்று, அமெரிக்கா சிகாகோ நகரில் நடைபெற உள்ள சர்வதேச யோகா போட்டியிலும் கலந்து கொள்ள உள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ