ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.

Last Updated : Apr 5, 2019, 10:59 AM IST
ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! title=

தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.

ஆரம்ப பள்ளி, இடைநிலை மற்றும் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது. இதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1, தாள் 2 என தகுதிக்கேற்ப இரு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், 'டெட்' எனும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். நிகழாண்டுக்கான தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியம் பிப்ரவரி, 28ம் தேதி அறிவித்திருந்தது. இந்த தேர்வுக்கான, ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த மார்ச் 15 முதல் பெறப்பட்டன.

விண்ணப்பத்தின் விலை ரூ.500 ஆகும். குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் முடிவடையவுள்ளது.

Trending News