நாட்டின் முதல் திருநங்கை செவிலியர் இவர்தான்!

முதல்முறையாக, அன்பு ரூபி என்ற திருநங்கை, அரசு மருத்துவமனையில் செவிலியர் பணியில் சேர்ந்துள்ளார்.

Updated: Dec 3, 2019, 12:19 PM IST
நாட்டின் முதல் திருநங்கை செவிலியர் இவர்தான்!

முதல்முறையாக, அன்பு ரூபி என்ற திருநங்கை, அரசு மருத்துவமனையில் செவிலியர் பணியில் சேர்ந்துள்ளார்.

மருத்துவப் பணியாளா்கள் தேர்வு வாரியம் வாயிலாக பல்வேறு பொறுப்புகளுக்குத் தோ்வு செய்யப்பட்டவர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இதில், அன்பு ரூபி என்ற திருநங்கையும் செவிலியர் பணி நியமன ஆணை பெற்றுக் கொண்டார். திருநங்கை ஒருவர் செவிலியராக தேர்வாகியிருப்பது இதுவே முதன்முறை என்றும், இது தமிழ்நாட்டிற்கு பெருமை தரும் விஷயம் என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியிருக்கிறார்.