திமுகவில் திருநங்கைகளுக்கான தனி அணி உருவாகிறது?...

திமுகவில் திருநங்கைகளை சேர்க்க சட்டத்திருத்தம் கொண்டுவரப்படத்தற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Updated: Nov 12, 2019, 12:41 PM IST
திமுகவில் திருநங்கைகளுக்கான தனி அணி உருவாகிறது?...

திமுகவில் (DMK) திருநங்கைகளை சேர்க்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்படத்தற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னை (Chennai) அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

கடந்த 10-ஆம் தேதி தேதி நடைபெற்ற திமுக பொதுக் குழுவின்போது திருநங்கைகளை திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்கும் வகையில் அக்கட்சியின் விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதனைத்தொடர்ந்து திருநங்கைகள் திமுக தலைவர் (MK Stalin) ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். 

இச்சந்திபிற்கு பின்னர் திருநங்கைகள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்., திருநங்கைகளுக்கென திமுக ஆட்சியில்தான் நலவாரியம் அமைக்கப்பட்டதாகக் தெரிவித்தார். திமுகவில் மற்ற அணிகளை போல திருநங்கைகளுக்கென தனி அணி உருவாக்க கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது திருநங்களைகளை திமுக-வில் சேர்க்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில்., விரைவில் தனி அணி அவர்களுக்கு என உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கடந்த 10-ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில், திமுக தலைமை நிலைய நிர்வாகிகள், பொதுக்கு உறுப்பினர்கள் செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 4500 பேர் பங்கேற்றுள்ளனர். பெயருடன் கூடிய அழைப்பிதழ்கள் வைத்திருந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். 

இந்தக் கூட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மு.க.ஸ்டாலினின் தனிச் சிறப்புத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சிறப்புத் தீர்மானங்கள் பட்டியல் கீழே.,

  • பொதுச்செயலாளருக்கு பதிலாக தலைவரே கழக சட்டதிட்டங்கள் மற்றும் முடிவுகளை அறிவிக்கும் அதிகாரம்.
  • இளைஞரணி பொறுப்பில் இருப்பவர்கள் கழக அமைப்பு பொறுப்பு வகிக்க முடியாது.
  • வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களை கழகத்தில் உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டு அங்கேயே கிளை அமைப்பு செய்து கொள்ளலாம்.
  • அகில இந்திய கட்சியாக தரம் உயர்த்தும் வகையில் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உறுப்பினர்களை சேர்த்து தமிழகத்தைப் போலவே அங்கும் செயற்குழு, பொதுக்குழு அமைத்துக் கொள்ளலாம்.
  • இணையத்தின் மூலமாகவும் கழக உறுப்பினராக சேரும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும். அப்படி சேருபவர்களுக்கும் இனி வாக்குரிமை பெற்று தரப்படும்.
  • பத்து பஞ்சாயத்துகளுக்கு ஒரு ஒன்றியச் செயலாளர் தேர்ந்தெடுக்கப் படுவார்.
  • ஊராட்சிக்கு ஒரு கிளைச் செயலாளர் முறை கொண்டுவரப்படும்.
  • திமுக அமைப்பு தேர்தலை 2020-ஆம் ஆண்டுக்குள் நடத்தி முடிப்பது.
  • திருநங்கைகளை திமுக உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம்.