திருமா உஷாராகிவிட்டார்... 'திமுக மீது நம்பிக்கையே இல்லை' - பற்ற வைத்த தமிழிசை

TN News Updates:திமுக கூட்டணியில் இருந்தால் 2026 வெற்றி கிடைக்காது என்பதை திருமாவளவன் புரிந்து கொண்டுவிட்டார் என மது ஒழிப்பு மாநாடு குறித்து பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். 

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sudharsan G | Last Updated : Sep 10, 2024, 03:18 PM IST
  • மதுவுக்கு எதிரான மாநாடா அல்லது கூட்டணிக்கு எதிரான மாநாடா...? - தமிழிசை
  • மகாவிஷ்ணுவை பயங்கரவாதி போல நடத்துவது தவறு - தமிழிசை
  • தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று கூறியது தவறு - தமிழிசை
திருமா உஷாராகிவிட்டார்... 'திமுக மீது நம்பிக்கையே இல்லை' - பற்ற வைத்த தமிழிசை title=

Tamil Nadu Latest News Updates: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னை காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன்,"பாஜக மற்றும் அதை சார்ந்த அமைப்புகள் விநாயகர் சதுர்த்தி சேவை விழாவாக செய்து வருகிறோம். விநாயகர் சதுர்த்தியை மதம் சார்ந்த விழாவாக பாஜக பார்க்கவில்லை.

மனிதம் சார்ந்த கொள்கைதான் பாஜகவின் கொள்கை. இந்து மதம் சார்ந்த கொள்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் எதிர்த்து குரல் கொடுப்பவர்களாக நாங்கள் இருக்கிறோம். ராகுல் காந்தி வெளிநாட்டுக்கு சென்று நாட்டைப் பற்றி மோசமாக பேசியுள்ளார், இதை வன்மையாக கண்டிக்கிறோம். ராகுல் காந்தி இந்தியன் போல பேசவில்லை, அந்நியன் போல பேசியுள்ளார். பெண்களைப் பற்றி தவறாக பேசிய ராகுல் காந்தி நாட்டில் உள்ள அனைத்து பெண்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்

மத்திய நிதியமைச்சர், குடியரசு தலைவர் என பெண்களுக்கு பல இடங்களில் பாஜக முன்னுரிமை அளித்து வருகிறது. இங்குள்ள பெண்கள் சமையல் அறையில் இருக்கிறார்கள் என ராகுல் காந்தி பேசியதை வன்மையாக கண்டிக்கிறோம். ராகுல் காந்தி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். அவசர காலத்தை உருவாக்கி பெண்களுக்கு நெருக்கடி நிலையை ஏற்படுத்தியது காங்கிரஸ் ஆட்சி. ராகுல் காந்திக்கு பெண் தலைவர்கள் என்றாலே அவரது அம்மா சோனியா காந்தியும், பாட்டி இந்திரா காந்தியும்தான்" என சாடினார்.

மேலும் படிக்க | திமுக அரசு விஜய்யை பார்த்து ஏன் பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை - எல்.முருகன்!

திமுக மீது விசிக நம்பிக்கை இழந்துவிட்டது

விடுதலை சிறுத்தைகள் நடத்தும் மது ஒழிப்பு மாநாடு குறித்து தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில்,"
திருமாவளவன் மதுவைப் பற்றி பேசும்போது ஏன் மதத்தைப் பற்றி பேச வேண்டும். திமுக கூட்டணியில் இருந்தால் 2026 வெற்றி கிடைக்காது என்பதை திருமாவளவன் புரிந்து கொண்டுவிட்டார். திருமாவளவன் நடத்தப் போகும் மாநாடு மதுவுக்கு எதிரான மாநாடா அல்லது கூட்டணிக்கு எதிரான மாநாடா என்பது புரியவில்லை.

இப்போது ஏன் மாநாடு?

4 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவுடன் கூட்டணியில் இருந்த விசிக, இத்தனை ஆண்டுகள் சும்மா இருந்துவிட்டு இப்போது மது ஒழிப்பு மாநாடு நடத்துவதற்கான காரணம் என்ன...?" என கேள்வி எழுப்பினார். மேலும், திமுகவில் இருக்கும் கூட்டணி கட்சிகள் திமுகவின் மீது உள்ள நம்பிக்கையை இழந்து விட்டார்கள் என்று தமிழிசை கூறினார்.

கள்ளக்குறிச்சியில் வரும் அக். 2ஆம் தேதி விசிக மகளிர் அணி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற இருக்கிறது.
இந்த மாநாட்டில் மது ஒழிப்பில் உடன்பாடுள்ள அனைவரும் ஒரே மேடையில் நிற்க வேண்டிய தேவை இருக்கிறது என்றும் இம்மாநாட்டிற்கு எந்தக் கட்சியும் வரலாம், அதிமுகவும் வரலாம் என்றும் திருமாவளவன் பேசியிருந்தார். அதிலும் குறிப்பாக, மக்கள் பிரச்சனைகளுக்காக சாதிய சக்திகளை தவிர எந்த சக்திகளோடும் இணைவோம் எனவும் திருமாவளவன் பேசியிருந்தார். இதையடுத்தே தமிழிசை சௌந்தரராஜன் விசிகவின் மாநாடு குறித்த இந்த கருத்தை தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன்,"தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக இருப்பதாலே தேசிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார்கள். அரசு பள்ளிகளில் அமைச்சர்களின் பிள்ளைகளோ, முதலமைச்சர் வீடுகளில் சேர்ந்தவர்களையோ பார்க்க முடியாது. தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று கூறியது தவறு. தேசிய கல்விக் கொள்கையில் அப்பட்டமான அரசியலை ஸ்டாலின் அரசு செய்து வருகிறது" என குற்றஞ்சாட்டினார்.

மகாவிஷ்ணு  விவகாரம்

மேலும்,"முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றுள்ள முதலமைச்சர் ஈர்த்துள்ள முதலீடுகள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ  அறிவிப்பு வெளியே வரவில்லை. ரூ.3300 கோடி முதலீட்டில் மத்திய அரசு நடவடிக்கையாலே தமிழகத்திற்கு ஹெச்பி லேப்டாப் கம்பெனி வரவுள்ளது. மகாவிஷ்ணு கருத்தில் வேறுபாடு இருக்கலாம், ஆனால் அவரை பயங்கரவாதி போல நடத்துவது தவறு.

திருநெல்வேலியில் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டார், அதற்கு தொடர்பான கைது இன்னும் செய்யவில்லை. கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு காரணம் யார் என்று கைது செய்யவில்லை. தமிழ்நாட்டில் கொலை குற்றங்கள் பல உள்ளது. ஆனால் அதைப் பற்றி எல்லாம் கேட்காமல் மகாவிஷ்ணுவை பயங்கரவாதி போல நடத்துகிறார்கள்" என தெரிவித்தார்.

மேலும் படிக்க | இந்தியாவின் பிரம்மாண்ட ரோபோடிக்ஸ் மையம்! தமிழகத்தில் தொடக்கம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News