’அறிவுப்பசி போக்க வயிற்று பசி ஆற்றும் தமிழகம்’ நூற்றாண்டு கடந்து தொடரும் சமூகநீதி திட்டம்

குழந்தைகளுக்கான காலை உணவு திட்டத்தை தமிழக அரசு தொடங்கியிருப்பதன் மூலம் நூற்றாண்டு கடந்து கல்விக்காக உணவளிக்கும் சமூக நீதி திட்டத்தின் அடுத்த அத்தியாயத்தை தொடங்கி வைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 15, 2022, 01:28 PM IST
  • தமிழகத்தில் காலை சிற்றுண்டி திட்டம்
  • மதுரையில் தொடங்கி வைத்த முதலமைச்சர்
  • நூற்றாண்டு கடந்து தொடரும் சமூகநீதி திட்டம்
’அறிவுப்பசி போக்க வயிற்று பசி ஆற்றும் தமிழகம்’ நூற்றாண்டு கடந்து தொடரும் சமூகநீதி திட்டம் title=

கல்வி கற்க வரும் மாணவர்களின் பசியை போக்கும் உணவுத் திட்டம் இன்று நேற்றல்ல, நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது. நீதிக்கட்சி தொடங்கி வைத்த இந்த திட்டத்தை தமிழக முன்னாள் முதலமைச்சர்களான காமராஜர், கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என அனைவரும் தங்களின் ஆட்சிக்காலத்தில் அடுத்தடுத்து மேம்படுத்திக் கொண்டே வந்தனர். பசியால் ஒரு குழந்தை படிப்பை நிறுத்திவிடக்கூடாது, பசியை போக்கவாவது அவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்ட உன்னத திட்டம் இது. 

வறுமையால் வீட்டில் ஒருவேளை உணவுக்கே கஷ்டம் என்றிருந்த பல குடும்பங்களில், பள்ளிக்கு குழந்தையை அனுப்பினால் அவர்கள் பசியில்லாமல் இருப்பார்கள் என்ற எண்ணத்தை உருவாக்கிய திட்டம். அப்படி படிப்படியாக வளர்ந்த சமூக நீதி திட்டத்தால் கல்வியறிவு பெற்ற மாநிலமாக மட்டுமல்லாமல், ஊட்டச்சத்து, ஆரோக்கியமான வாழ்வியல் கொண்ட சமூகமாகும் தமிழ் சமூகம் இருப்பதற்கு, கல்விக்கு உணவளித்த இந்த சமூக நீதி திட்டம் ஒரு காரணி என்று கூறலாம். அப்படிப்பட்ட இந்த திட்டம் இன்று வேறொரு பரிணாமத்தை பெற்றிருக்கிறது. 

மேலும் படிக்க | குழந்தைகளுக்கு உணவு ஊட்டி மகிழ்ந்த முதலமைச்சர்; காலை உணவு திட்ட தொடக்க விழா புகைப்படங்கள்

முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் என்ற பெயரில் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு காலையிலேயே உணவளித்து அவர்கள், பசியின்றி கல்வியை கற்கும் சூழலை உருவாக்கியிருக்கிறது தமிழக அரசு. முதல் கட்டமாக நகராட்சி மற்றும் மாநகராட்சி, தொலைதூர கிராமங்களில் இருக்கும் பள்ளிகளில் தொடங்கப்பட்டாலும், படிப்படியாக மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட இருக்கிறது. அண்ணா பிறந்த நாளில் தொடங்கப்பட்டது இந்த திட்டத்திற்கு கிடைத்த இன்னொரு சிறப்பு.   

ஆங்கிலேய அரசால் மதிய உணவுத்திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது, 1971 காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்கினார். பின்னர் ஆட்சிக்கு வந்த அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி தலைமையில் அமைந்த திமுக அரசு அந்த திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்றியது. அதிக மையங்களை உருவாக்கி கூடுதல் நிதியை ஒதுக்கியவர் எம்.ஜி.ஆர். அடுத்து ஆட்சிக்கு வந்தபோது, மதிய உணவு திட்டத்தை மேம்படுத்திய கலைஞர் கருணாநிதி, முட்டை, பயறு உள்ளிட்ட சத்தாண உணவுகளை கொடுத்து சத்துணவு திட்டமாக்கினார். ஜெயலலிதா மதிய உணவை கலவை சாதமாக மாற்றினார். இப்படி ஆட்சிக்கு ஆட்சி மேம்படுத்தப்பட்ட இந்த திட்டம் இப்போது புதிய பரிமாணத்தை பெற்றிருக்கிறது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பேசியபோது, "என் வாழ்வின் பொன்னான நாட்களில் இதுவும் ஒன்று. பள்ளி மாணவர்களின் பசிப்பிணியை போக்க எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளேன்" என நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் பலரும், தமிழக அரசின் இந்த திட்டத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். 

மேலும் படிக்க | காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News