மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக இன்று மாலை தமிழக சிறப்பு சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது!
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு ஆர்வம் காட்டி வருகிறது. கர்நாடக அரசின் முயற்சிக்கு உதுவும் வகையில் மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த செயல்பாடு தமிழக மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில் மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் அணை கட்டும் கர்நாடக அரசு, அனுமதி அளித்த மத்திய அரசுக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்ற தமிழக சட்டசபையில் சிறப்பு கூட்டம் இன்று கூட உள்ளது.
மத்திய அரசின் அனுமதியை திரும்பப் பெறுமாறு மத்திய நீர்வள அமைச்சகம் உத்தரவிடவும் சிறப்பு சட்டசபை கூட்டத்தில் வலியுறுத்தப்படவுள்ளது. காவிரி படுகையில் மேகதாது உள்ளிட்ட எந்த இடத்திலும் கட்டுமான பணிகள் மேற்கொள்ளக் கூடாது எனவும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.