கமல் உடல்நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி; விரைவில் சந்திப்பார்: MNM

கமல்ஹாசனுக்கு சிகிச்சை நலமாக முடிந்தது. அவர் உடல்நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி; விரைவில் உங்களை சந்திப்பார் என மக்கள் நீதி மய்யம் தகவல்

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 22, 2019, 06:30 PM IST
கமல் உடல்நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி; விரைவில் சந்திப்பார்: MNM title=

சென்னை: கமல்ஹாசனுக்கு நடைபற்ற அறுவை சிகிச்சை குறித்து, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கமல்ஹாசன் அவர்களுக்கு காலில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை நலமாக முடிந்தது. அனைவருக்கும் நன்றி எனக் கூறப்பட்டு இருக்கிறது. 

கடந்த 2016-ஆம் ஆண்டு எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தின் காரணமாக கமல் ஹாசனுக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டது. அப்பொழுது அந்த முறிவினை சரி செய்வதற்காக அறுவை சிகிச்சை செய்து அவரது காலில் டைட்டானியம் கம்பி பொறுத்தப்பட்டது. அரசியல் மற்றும் சினிமாவில் தலைவர் அவர்களுக்கு இருந்த தொடர் வேலைபளு காரணமாக அக்கம்பியை அகற்றுவதற்கான சூழல் அமையவில்லை. மருத்துவர்களின் ஆலோசனையின் படி கமல்ஹாசனுக்கு நவம்பர் 22 அன்று அக்கம்பினை அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக சில நாட்கள் கமல் ஹாசன் ஓய்வில் இருப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்தநிலையில், இன்று கமல்ஹாசனுக்கு டைட்டானியம் கம்பி அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதுக்குறித்து தகவலை வெளியிட்ட மக்கள் நீதி மய்யம், கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்கு இன்று காலை நடைபெற்ற அறுவை சிகிச்சை நலமாக முடிந்தது. அதனைதொடர்ந்து தலைவர் தற்போது ஓய்வில் உள்ளார். தலைவர் கமல்ஹாசன் உடல்நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளது.

 

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்கு இன்று அப்பல்லோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ள நிலையில், அவரை தமிழக எதிர்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று நேரில் சந்தித்து நலம் விசாரித்து உள்ளார். அதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மு.க. ஸ்டாலின் கூறியது, நண்பர் "கலைஞானி" கமல்ஹாசன் அவர்களை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தேன். விரைவில் அவர் முழுநலம் பெற வேண்டுமென என் விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Trending News