சென்னை லிங்கி செட்டி தெருவைச் சேர்ந்த கஸ்துார்சந்த் ஜெயின் என்பவர், கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரலில், சென்ட்ரலில், தெற்கு ரயில்வே அலுவலகம் முன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அதிவேகமாக வந்த ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானார்.
இதில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், கணவரின் இறப்புக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு கோரி கஸ்துார்சந்த் ஜெயினின் மனைவி புஷ்பா தேவி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும் படிக்க | தேரில் மின்சாரம் பாய்ந்து 12 பேர் பலி! தலா ரூ. 5 லட்சம் நிவாரண நிதி அறிவிப்பு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சுரேஷ், ஆட்டோவை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே மனுதாரரின் கணவர் மரணத்துக்கு காரணம் என்பது தெளிவாகிறது எனக் கூறி, மனுதாரர் கோரிக்கையின்படி, ஒரு கோடி ரூபாயை ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் இழப்பீடாக வழங்க ஐ.சி.ஐ.சி.ஐ., லம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.
இழப்பீடு தொகை 1 கோடியே 32 லட்சமாக கணக்கிடப்பட்டு வரி பிடித்தம் போக ஒரு கோடி ரூபாய் 18 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் மனுதாரர் ஒரு கோடி ரூபாய் மட்டுமே இழப்பீடு கோரியுள்ளதால், அவர் கேட்ட ஒரு கோடி ரூபாயை மட்டுமே இழப்பீடாக வழங்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | 150CC-க்கு மேற்பட்ட பைக் ஓட்டிச் சென்று இறந்தால் இன்சூரன்ஸ் பணம் இல்லை!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR