அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி

உதகை அருகே மந்தாடா பகுதியில் அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழப்பு!

Last Updated : Jun 14, 2018, 01:05 PM IST
அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி title=

உதகை அருகே மந்தாடா பகுதியில் அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழப்பு!

நீலகிரி: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தொடர் மலையானது நீடித்து வருகிறது. தற்போது உதகை அருகே மந்தாடா பகுதியில் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், பொது மக்களும் மீட்ப்பு குழுவினரும் மீட்ப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில், சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களை உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 

 

Trending News