உதகை அருகே மந்தாடா பகுதியில் நேற்று அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு!
நீலகிரி: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தொடர் மலையானது நீடித்து வருகிறது. நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து குன்னூா் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று நேற்று காலை 11 மணிக்கு புறப்பட்டது. பேருந்து மந்தகடா பகுதியில் சென்றபோது லாரியை முந்திச் செல்ல முற்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மலைப்பாதையில் கட்டுப்பாடு இன்றி சென்றுள்ளது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து அருகில் இருந்த 250 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பேருந்தின் ஓட்டுநர் பிரகாஷ் (38) மற்றும் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.