கஜாவால் சேதமடைந்த படகுகளை சீரமைக்க ரூ.683.15 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு...

கஜா புயலால் சேதமடைந்த மீன்பிடி படகுகளை சீரமைக்க ரூ.683.15 கோடி ஒதுக்கி தமிழக அரசாணையை வெளியிட்டுள்ளது....

Updated: Feb 10, 2019, 09:24 AM IST
கஜாவால் சேதமடைந்த படகுகளை சீரமைக்க ரூ.683.15 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு...

கஜா புயலால் சேதமடைந்த மீன்பிடி படகுகளை சீரமைக்க ரூ.683.15 கோடி ஒதுக்கி தமிழக அரசாணையை வெளியிட்டுள்ளது....

கடந்த ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதுவும் தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து, தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணியை அரசு செய்து வந்தது. இருந்தாலும் இன்னும் சில பகுதிகளை கண்டுகொள்ள வில்லை என இன்னும் பல பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதையடுத்து, கடந்த 8 ஆம் தேதி தமிழக நிதிநிலை அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்த போது, மத்திய , மாநில அரசு பங்களிப்புடன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று வீடு கட்டித்தரப்படும். இதற்கு ரூ.1,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. இதை தொடர்ந்து, கஜா புயலால் சேதமடைந்த மீன்பிடி படகுகளை சீரமைக்க ரூ.683.15 கோடி ஒதுக்கி தமிழக அரசாணையை வெளியிட்டுள்ளது. மேலும், படகுகள் சீரமைப்பு பணிகள், மீன்பிடி வலைகள் வாங்க மீனவர்களுக்கு நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மீனவர்களுக்கு நிதி ஒதுக்கீடும் தெரிவித்துள்ளது. 

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "கஜா புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்ட மீனவர்களுக்கு கூடுதல் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புயலால் சேதமடைந்த 1051 படகுகள், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்கள் வழங்க கூடுதலாக ரூ.683.15 கோடி நிதி ஒதுக்க அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான இழப்பீடு தொகை ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. படகுகள் சீரமைப்பு பணிகள், மீன்பிடி வலைகள் வாங்க மீனவர்களுக்கு நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு. புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மீனவர்களுக்கு நிதி ஒதுக்கீடு" என குறிப்பிட்டுள்ளது.