லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்: மத்திய மந்திரியுடன் பேச்சுவார்த்தை!

கடந்த 18-ம் தேதி முதல் நடைபெற்று வந்த லாரிகள் வேலைநிறுத்தம் திடீர் வாபஸ் பெறப்பட்டுள்ளது!  

Last Updated : Jun 22, 2018, 07:33 AM IST
லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்: மத்திய மந்திரியுடன் பேச்சுவார்த்தை! title=

கடந்த 18-ம் தேதி முதல் 4 நாட்களாக நடந்து வந்த லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து வருகிற 27-ந் தேதி லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன், மத்திய மந்திரி நிதின் கட்காரி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.இதனால்  இன்று முதல் வழக்கம் போல் லாரிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அதிகாரிகள் வாக்குறுதி அளித்துள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் சுகுமார் தெரிவித்துள்ளார். 

டீசல் விலை தினசரி உயர்வு மற்றும் 3-வது நபர் காப்பீட்டு தொகை கட்டணம் 30 சதவீதம் அதிகரிப்பு, ஆண்டுதோறும் சுங்க கட்டணம் உயர்வு போன்ற காரணங்களால் லாரி தொழில் நலிவடைந்து வருகிறது.

இதனால், டீசல் விலையை மூன்று மாதத்திற்கு ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும், சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் நேற்று முன்தினம் அறிவித்து கடந்த 18-ம் தேதி முதல் 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர் என்பது குறிபிடத்தக்கது.

Trending News