இரட்டை இலை சின்னத்தை OPS-EPS தரப்புக்கு தடை விதிக்க SC மறுப்பு!!

இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கியதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு...

Last Updated : Mar 15, 2019, 11:54 AM IST
இரட்டை இலை சின்னத்தை OPS-EPS தரப்புக்கு தடை விதிக்க SC மறுப்பு!! title=

இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கியதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர், அதிமுக இரண்டாக உடைந்தது. பின்னர் ஓபிஎஸ்- இபிஎஸ் இணைந்த நிலையில் சசிகலா- தினகரன் தனியாக ஒதுக்கப்பட்டனர். இதையடுத்து ஓபிஎஸ்- இபிஎஸ் மற்றும் சசிகலா- தினகரன் ஆகிய இரு தரப்பினரும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கொண்டாடினர். இதனால், தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை கடந்த 2017 மார்ச் மாதம் முடக்கியது. 

இரட்டை இலை சின்னத்தை அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் வழங்கியதை எதிர்த்து டிடிவி தினகரன் தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தை அனுகியது. அந்த வழக்கில் இரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்கு வழங்கியது சரிதான் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேலும் இடைக்கால சின்னமாக குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா அமர்வு இவ்வழக்கை விசாரணை செய்தது. இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் ஓ பன்னீர்செல்வம் - எடப்பாடி கே பழனிசாமி தரப்புக்கு ஒதுக்கியதற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேவேளையில், குக்கர் சின்னம் தனக்கு ஒதுக்க வேண்டும் என்ற டிடிவி தினகரனின் கோரிக்கை தொடர்பாக, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டது.

 

Trending News