அதிமுக சார்பில் திருவாரூர் வேட்பாளராக யார் போட்டியிடுவார் என ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என தமிழக துணை முதலவர் தெரிவித்துள்ளார்...
அதிமுக ஆட்சிமன்ற கூட்டத்தில், திருவாரூர் இடைத்தேர்தல் வேட்பாளருக்கான நேர்க்காணல் நடைபெற்று முடிந்துள்ளதாகவும், இன்னும் ஓரிரு தினங்களில் வேட்பாளரை அறிவிக்கவுள்ளதாகவும், அதிமுக பொதுச்செயலாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் இடைத் தேர்தலுக்காக தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், இன்று அதிமுக ஆட்சிமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஆட்சிமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில், திருவாரூர் தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளருக்கான நேர்க்காணல் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ், வேட்பாளரை ஓரிரு நாட்களில் அறிவிக்க உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், எத்தனை தேர்தல் வந்தாலும் அவற்றை சந்திக்கஅதிமுக அச்சப்படாது. தேர்தலை கண்டு அதிமுக என்றைக்குமே பின்வாங்காது. திருவாரூர் தேர்தலின் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய சரித்திரத்தை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.