விஜய் - வெற்றிமாறன் கூட்டணி எப்போது? சஸ்பென்ஸ் உடைத்த ஜீவி பிரகாஷ்!

விஜய் - வெற்றிமாறன் படம் குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் பதில் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 6, 2022, 08:20 AM IST
  • மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களை மீண்டும் திரையரங்கிற்கு வரச் செய்தது.
  • விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.
  • விஜய் தெலுங்கு இயக்குனரான வம்சி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
விஜய் - வெற்றிமாறன் கூட்டணி எப்போது? சஸ்பென்ஸ் உடைத்த ஜீவி பிரகாஷ்! title=

விஜய் தற்போது முன்னணி நடிகர்களையும் தாண்டி வேறு ஒரு பரிமாணத்தில் இருக்கிறார். அவருடைய படங்கள் மிகப்பெரிய வசூல் சாதனை செய்து வருகிறது, கமர்ஷியல் படங்களிலும் சமூகத்திற்குத் தேவையான சில நல்ல விஷயங்களை கூறி வருகிறார்.  கடந்த ஆண்டு பொங்கல் அன்று வெளியான விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் திரையரங்கிற்கு மீண்டும் உயிர் கொடுத்தது. கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டும், மக்கள் கூட்டம் திரையரங்கிற்கு வரவில்லை.  விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தான் ரசிகர்களை மீண்டும் திரையரங்கிற்கு வரச் செய்தது.

Vaathicoming

மேலும் படிக்க | மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விஜய் தெலுங்கு இயக்குனரான வம்சி இயக்கத்தில் நடிக்க உள்ளார், இது விஜய்யின் 66வது திரைப்படமாகும். இந்த படத்தினை தொடர்ந்து விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்று கடந்த சில தினங்களாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு காலதாமதம் ஆகும். 

vijay

இந்நிலையில் நீண்ட நாட்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விஜய் - வெற்றிமாறன் பட கூட்டணி எப்போது அமையும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த ஆண்டு வெற்றிமாறன் ஒரு நேர்காணலில் நானும் விஜய்க்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருந்தார். நேற்று இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் ரசிகர்களின் கேள்விக்கு ட்விட்டரில் பதிலளித்து வந்தார். அதில் விஜய் - வெற்றிமாறன் கூட்டணியில் நீங்கள் இசையமைப்பாளராக வாய்ப்புள்ளதா என்று கேட்டதற்கு, விஜய் வெற்றிமாறன் இருவரும் வெவ்வேறு படங்களில் பிஸியாக உள்ளனர், நேரம் கூடி வரும்போது தானாக நடக்கும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இந்த கூட்டணி இல்லை என்று அவர் மறுக்கவில்லை, இதனால் கண்டிப்பாக வருங்காலத்தில் இந்த கூட்டணி நடைபெறும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

gv

மேலும் படிக்க | பீஸ்ட் ஆடியோ ரிலீஸ் தேதி? இந்தப் பாடலுக்கு டான்ஸ் ஆடுவாரா விஜய்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News