அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் குழு தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி எம்பியுமான திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு அவரவர்களின் துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன், தமிழகத்தில் எதிர்க்கட்சியே இல்லாத இல்லை என சொல்ல கூடிய அளவிற்கு நிலைமை உள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக கூட்டணியில் 10 கட்சிகளுக்கு மேலாக அங்கம் வகிக்கிறோம். இதில் 2 கட்சிகள் தொகுதி உடன்பாடு செய்து கொண்டு கையெழுத்திட்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொறுத்தவரை முதல் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கெடுத்துள்ளோம் விருப்பங்களை வெளிப்படுத்தியுள்ளோம். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஓரிரு நாட்களில் நடைபெறும் என நம்புகிறோம் என தெரிவித்தார். சுமூகமான முறையில் எங்களது கோரிக்கைகளை முன்வைத்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம் என கூறிய திருமாவளவன், விரைவில் தொகுதி உடன்பாடு ஏற்படும் என தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் நான்கு தொகுதிகளை கேட்டுள்ளோம், அதில் ஒரு தொகுதி பொது தொகுதி என்று கூறிய அவர், ஆனால் கேட்டது கிடைக்காது என்பதையும் உணர்ந்திருப்பதாக கூறினார். "எட்டு கட்சிகள் கூட்டணியில் உள்ளதால் அவ்வளவு தொகுதிகளை பெற முடியாது என்ற நிதர்சனத்தையும் உணர்ந்துள்ளோம். சூழலுக்கு ஏற்ப முடிவு செய்வோம். பிஜேபியை விட்டு அதிமுக தனியாக பிரிந்து வந்தாலும் பிஜேபி அதிமுகவை விடுவதாக இல்லை. அதிமுகவை மூன்றாம் நிலைக்குத் தள்ளி அதனை பலவீனப்படுத்தும் முயற்சியில் பாஜக உள்ளது. இதனை ஏற்கனவே பலமுறை தெரிவித்து வந்துள்ளேன்" என திருமாவளவன் கூறினார்.
சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவீர்களா என்று கேட்ட கேள்விக்கு இது என்னுடைய சொந்த தொகுதி இங்கு தான் நிற்பேன். உங்களுக்கு சந்தேகம் வேண்டாம் இந்த தொகுதியில் தான் போட்டியிட முடியும் என அவர் கூறினார். நாடாளுமன்ற தேர்தல் 2024ல் தென் மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிக அளவில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். கர்நாடகாவில் மூன்று தொகுதிகளிலும் ஆந்திராவில் மூன்று தொகுதிகளிலும் கேரளாவில் இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு கட்சியினர் முன்வந்துள்ளனர் என திருமாவளவன் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் திமுக கூட்டணியிலும் மற்ற மாநிலங்களில் இந்திய கூட்டணியில் போட்டியிட முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ