தன் தந்தையின் கல்லறயை உடைத்து அகற்றிய போலீஸ்கார மகன்! நடவடிக்கை பாயுமா?

தூத்துக்குடி அருகே தனது தந்தையின் கல்லறையை இரவோடு இரவாக மகன் உடைத்த சம்பவம் அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jul 4, 2023, 10:39 AM IST
  • பெற்ற தந்தையின் கல்லறயை உடைத்து அகற்றிய போலீஸ்கார மகன்.
  • கல்லறையை மீண்டும் கட்டித்தர வேண்டுமென கண்ணீருடன் தாய்.
  • கல் நெஞ்ச போலீஸ் மீது நடவடிக்கை பாயுமா?
தன் தந்தையின் கல்லறயை உடைத்து அகற்றிய போலீஸ்கார மகன்! நடவடிக்கை பாயுமா?  title=

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள குலசேகரன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த சௌந்தரராணி. இவருடைய கணவர் ரெத்தினசாமி இறந்து 8 ஆண்டுகள் ஆனது. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சௌந்தரராணி கணவன் இறந்த பிறகு அவரது பண்ணை வீட்டில் இளைய மகனிடம் வசித்து வருகிறார். அவரின் மூத்த மகனான சுடலைராஜ் மெஞ்ஞானபுரம் போலீஸ் ஸ்டேஷனில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் பண்ணை வீடு அருகிலேயே சுடலைராஜ் புதிய வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். பண்ணை வீட்டிற்கு பின்புறம் அவரின் தந்தை ரெத்தினசாமியின் கல்லறை உள்ளது. ரத்தினசாமி இறந்து போவதற்கு முன்னர் தான் இறந்து விட்டால் இந்த இடத்தில் தான் தன்னைப் புதைக்க வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது கல்லறையை சுடலைராஜ் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இரவில் தரைமட்டமாக உடைத்துள்ளார்.

மேலும் படிக்க | கரூரில் 20 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் - கிரஷர் உரிமையாளர்கள் கோரிக்கை

இதை அறிந்த தாயார் சுடலை ராஜிடம் தந்தையின் கல்லறையை ஏன் உடைத்தாய் என்று கேட்டதற்கு.... தந்தை கல்லறை இருப்பதினால் என்னுடைய மனைவி குழந்தைகளுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்படுகிறது, இதனால் கல்லறையை இடித்து விட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் தனது கணவரின் கல்லறையை உடைத்ததை கண்டு மனமுடைந்த தாயார்  சாத்தான்குளம் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.  அங்கு சுடலைராஜிடம் காவல்துறையினர் அவரது தந்தையின் கல்லறை இருந்த இடத்தில் 15 நாட்களுக்குள் அதே இடத்தில் கட்டி கொடுக்க வேண்டும் என்று சாத்தான்குளம் போலீசார் சுடலைராஜை சத்தம் போட்டு அனுப்பி உள்ளனர். ஆனால் 15 நாட்கள் கழித்தும் கல் நெஞ்சம் கொண்ட காக்கி போலீசான சுடலைராஜ் கல்லறை கட்டிக் கொடுத்ததால் இன்று அவருடைய தாயார் சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகத்திற்கு தங்களுடைய கணவரின் கல்லறையை அதை இடத்தில் கட்ட வேண்டும் என்று கண்ணீர் மல்க  புகார் அளிக்க வந்திருந்தார். 

ஆனால் டிஎஸ்பி ஒரு நாள் விடுப்பில் சென்றதால் அங்குள்ள அதிகாரியிடம் புகார் மனுவை அளித்து கண்ணீர் மல்க சென்றார்.   இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் இந்த விவகாரத்தில் தலையிட்டு தனது கணவரின் கல்லறை இருந்த இடத்தில் மகன் சுடலைராஜ் மீண்டும் புதிய கல்லறை கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த ஏழை தாயின் கோரிக்கையாக உள்ளது.  மேலும் அவனவன் தான் தந்தை உயிரிழந்த பின்னர் "தந்தைக்கு கோவில் கட்டி சிலை வைத்து கும்பாபிஷேகம் வைத்து" இறந்த பின்னும் அவர்களது தந்தையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் இரக்கமற்று கல் நெஞ்சம் கொண்டு தனது தந்தையின் கல்லறையை இடித்து தரைமட்டமாக்கிய கல் நெஞ்சம் கொண்ட காக்கியின் இந்த செயலுக்கு அவரது தாயார் மட்டுமல்ல அங்கிருந்து அனைவரும் கண்ணீர் சிந்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | அதிமுகவின் மதுரை மாநாடு: எஸ்.பி.வேலுமணி சூளுரை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News