மதுரை: முன்விரோதத்தில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு! அதிரவைக்கும் பின்னணி - 3 பேர் கைது!

Madurai Tiffen Box Bomb Case : மதுரை மேலூர் அருகே முன்விரோதம் காரணமாக டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் இருவர் காயமடைந்தனர். 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து, மூன்றூ பேரை கைது செய்து கீழவளவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 21, 2024, 11:50 AM IST
  • மதுரையில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீச்சு
  • 3 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை
  • முன்விரோதம் காரணமாக கொலை செய்ய முயற்சி
மதுரை: முன்விரோதத்தில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு!  அதிரவைக்கும் பின்னணி - 3 பேர் கைது! title=

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையத்தேவன், மைக்கேல், அசோக், கார்த்தி உள்ளிட்டவர்களுக்கு, அப்பகுதியில் நடைபெற்ற வீரகாளியம்மன் கோவில் திருவிழாவில் முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இதனால் நவீன்குமாரை கொலை செய்ய வெள்ளையத்தேவன் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், நவீன்குமார் தனது காரில், கீழவளவு பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த வெள்ளையத்தேவன், அசோக், கார்த்தி உள்ளிட்ட சிலர் டிபன் பாக்ஸ் குண்டை நவீன்குமாரின் காரின் முன்பக்க கண்ணாடி மீது வீசி உள்ளனர்.

மேலும் படிக்க | கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல்.. தமிழக கேரள எல்லைகளில் சோதனை தீவிரம்

இதனால் அதிர்ச்சி அடைந்த நவீன்குமார், காரில் இருந்து இறங்கிய நிலையில், அவரை வெள்ளையத்தேவன் தான் வைத்திருந்த அரிவாளால் வெட்டி உள்ளார். இதில் நவீன்குமாரின் வலது கை விரல் துண்டானது. இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக வரவும், வெள்ளையத்தேவன் உள்ளிட்டவர்கள் அங்கிருந்து தப்பிச் ஓடி உள்ளனர். மேலும் இந்த டிபன் பாக்ஸ் குண்டு வீசபட்டபோது, நவீன்குமார் கார் அருகே நின்றுக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர் கண்ணன் என்பவருக்கும் கழுத்தில் காயம் ஏற்பட்டது. 

அப்போது,  அருகில் இருந்தவர்கள் இருவரையும் உடனடியாக மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்த நவீன்குமார் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து, கீழவளவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, வெள்ளையத்தேவன், மைக்கேல் எனர் என்ற மகாலிங்கம், அசோக், அஜய், கார்த்தி, வசந்த், கண்ணன், மற்றும் பாலு உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 

மேலும், வெள்ளையத்தேவன் மற்றும் அசோக் உள்ளிட்ட மூவரை கைது செய்து அவர்களிடம் இருந்த வாள், டிபன் பாக்ஸ் குண்டு ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய மேலும் சில குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமான தேடி வருகின்றனர். 

லேட்டஸ்ட்டாக வெளியான தகவலின்படி, நவீன் குமாருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் வெளிநாட்டில்  பணியாற்றியபோது புகையிலை விற்பனை செய்வது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாக தற்போது நவீன் குமாரை இந்த கும்பல் கொலை செய்ய முயற்சித்ததும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேபோல், நவீன் குமார் மீதும் எதிர் தரப்பினர் மீதும் ஏற்கனவே சில வழக்குகள் காவல் நிலையத்தில் இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தேர்தல் சுவாரஸ்யம்: வாக்குச்சாவடிகுள் நுழைந்த மலைப்பாம்பு! அலறியடித்து ஓடிய பொதுமக்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News