தமிழக சட்டசபை தேர்தல் 2021: மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் தீவிர ஆலோசனை!!

சட்டமன்ற தேர்தல்களுக்கு முன்னதாக கட்சியின் கூட்டணி குறித்து அனைத்து முடிவுகளை எடுக்க கமல்ஹாசனுக்கு அதிகாரம் அளித்த பின்னர் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 2, 2020, 02:57 PM IST
தமிழக சட்டசபை தேர்தல் 2021: மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் தீவிர ஆலோசனை!!

Chennai: நடிகர் மற்றும் அரசியல்வாதியான கமல்ஹாசன் (Kamal Haasan) தனது கட்சி மாவட்ட செயலாளர்களுடன் நேரில் சந்தித்து 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நவடிக்கைகளை குறித்து ஆலோசனை செய்கிறார். சட்டமன்ற தேர்தல்களுக்கு முன்னதாக கட்சியின் கூட்டணி குறித்து அனைத்து முடிவுகளை எடுக்க கமல்ஹாசனுக்கு அதிகாரம் அளித்த பின்னர் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. மேலும் ஆளும் அதிமுக (AIADMK) ஆட்சிக்கு எதிராக கமல்ஹாசன் தொடர்ந்து விமர்சனம் வைத்து வருகிறார் என்பதும் கவனிக்கவேண்டி உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தின் முக்கியமாக,  வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலை (2021 Tamil Nadu Assembly elections) கருத்தில் கொண்டு அனைத்து தொகுதிகளுக்கும் பூத் கமிட்டிகளை அமைப்பதிலும், கட்சிக்கான நிதியை எப்படி சேகரிப்பது, மேலும் மாநில அளவிலான பிரச்சார சுற்றுப்பயணத்திற்கான திட்டங்களை வகுப்பது போன்ற ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மக்கள் நீதி கட்சியின் நிலைப்பாட்டைப் பொறுத்தவரை, ஆளும் பாஜகவுக்கும் (BJP), மாநிலத்தில் உள்ள அதிமுக அரசாங்கத்திற்கும் எதிராக கமல்ஹாசன் குரல் கொடுத்து வருகிறார். நடிகர் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோருடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருடன் வழக்கமான சந்திப்புகளை நடத்தியுள்ளார். அவரது சித்தாந்தம் இடது மற்றும் திராவிடம் கலந்ததாக உள்ளது. 

ALSO READ |  அம்மாவின் பெயரில் ஆட்சி நடத்துபவர்கள் கொரோனாவை விட ஆபத்தானவர்கள்: கமல்ஹாசன்

பிப்ரவரி 2018 இல் தொடங்கப்பட்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் (Makkal Needhi Maiam), 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் 39 இடங்களில் போட்டியிட்டதுடன், தமிழகத்தில் 22 சட்டமன்ற இடங்களுக்கான இடைத்தேர்தல்களிலும் போட்டியிட்டது.

முதன்முதலாக போட்டியிட தேர்தலில் எந்த இடங்களையும் பெறவில்லை என்றாலும், அவர்கள் சில தொகுதிகளில் ஒரு லட்சம் வாக்குகளைத் தாண்டினர், மேலும் சிலவற்றில் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். 

இதுக்குறித்து பேசிய கமல், தனது கட்சிக்கு வாங்கு கிடைக்காததற்கு முக்கிய தடையாக மற்ற கட்சிகள் செய்த பணம் விநியோகம் என்று நடிகர் வெளிப்படுத்தியிருந்தார். இதனால் கிராமப்புறங்களில் எங்கள் கட்சிக்கு சரியாக வாங்கு கிடைக்கவில்லை. நகர்ப்புறங்களில் அதிக வாக்குகளைப் பெற்றனர்.

சில பகுதிகளில் எங்களிடம் 12 சதவீத வாக்குகள் இருந்தது. எங்கள் சராசரி வாக்குப் பங்கு கிட்டத்தட்ட 5 சதவீதமாகும்", என்று கமல் கூறினார். 

ALSO READ |  கொரோனாவுக்கு பயந்து கமல்ஹாசன் 100 நாட்கள் உள்ளேயே இருந்தார்: ஜெயக்குமார்

நவம்பர் 7 ஆம் தேதி தனது 66 வது பிறந்த நாளைக் கொண்டாடும் (Kamal Haasan 66th birthday) கமல்ஹாசன் தனது 232 வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் செப்டம்பர் மாதம் அறிவித்திருந்தார். 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News