தமிழக சட்டமன்ற தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. களம் சூடு பிடித்துள்ளது. முக்கிய தலைவர்கள் வாக்காளர்களை கவர தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒருவார காலத்திற்கு முன் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில், இன்று பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியானது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள்
- தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்
- தமிழகத்தில் தேசிய கல்விக்கொள்கை முழுமையாக அமல்படுத்தப்படும்
- இந்து கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்படும். மறைந்த குன்றக்குடி அடிகளார் தலைமையிலான கமிட்டியின் பரிந்துரைப்படி, இந்து ஆன்றோர், சான்றோர் மற்றும் துறவிகள் அடங்கிய தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்.
அர்ச்சர்கர்கள் மற்றும்
- ஆலயங்களில் நாதஸ்வர இசைக்கு மாற்றாக பொருத்தப்பட்டுள்ள “மின்சார இசை கருவிகள்” அகற்றப்பட்டு மீண்டும் நாதஸ்வர கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்.
- விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன்
- விலை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய 'விலை நிர்ணயக் குழு’
- தமிழக அரசின் பொதுப் பணித்துறையின் கீழ் 'விவசாய நீர் பாசன துறை’ உருவாக்கப்படும்.
- கட்டாய மதம் மாற்று தடைச் சட்டம்
- பசுவதை தடைச் சட்டம் அமல்படுத்தப்படும்.
Chennai: Union Ministers Nitin Gadkari and VK Singh release Bharatiya Janata Party manifesto for Tamil Nadu Assembly elections pic.twitter.com/QfN8gXZT6S
— ANI (@ANI) March 22, 2021
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தமிழக பாஜக தலைவர் திரு.எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
ALSO READ | TN Assembly Election 2021: வெளியானது அதிமுகவின் அதிரடி தேர்தல் அறிக்கை..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR