TN Assembly Election 2021: வெளியானது அதிமுகவின் அதிரடி தேர்தல் அறிக்கை..!!

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், வாக்காளர்களை கவர, கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளையும் இலவசங்களையும் அள்ளி வீசி வருகின்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 14, 2021, 07:54 PM IST
  • விலை இல்லா அம்மா வாஷிங் மெஷின் வழங்கும் திட்டம்.
  • அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகப்பேறு விடுப்பு ஒரு வருடமாக நீட்டிக்கப்படும்.
  • இளைஞர்களுக்கு குறைந்தவட்டியுடன் தொழில் தொடங்க நிதியுதவித் திட்டம்.
TN Assembly Election 2021: வெளியானது அதிமுகவின் அதிரடி தேர்தல் அறிக்கை..!! title=

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், வாக்காளர்களை கவர, கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளையும் இலவசங்களையும் அள்ளி வீசி வருகின்றன. 

இந்நிலையில் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இந்நிலையில், இன்று அதை தூக்கி சாப்பிடும் வகையில் அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் சலுகை திட்டங்களை வாரி வழங்கியுள்ளது.
அதிமுகவின் தேர்தல் அறிக்கையில், முக்கியமாக இடம் பெற்றவை

  • விலை இல்லா அம்மா வாஷிங் மெஷின் வழங்கும் திட்டம். 
  • விலையில்ல அரசு கேபிள் திட்டம் அறிமுகம்
  • தமிழ்நாட்டில் வீட்டில் ஒருவருக்கு அரசு பணி
  • உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை.
  • ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல் டீசல் விலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • மின் கட்டணம் மாதம் தோறும் கணக்கிடப்படும்
  • அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகப்பேறு விடுப்பு ஒரு வருடமாக நீட்டிக்கப்படும்
  • ஆட்சிக்கு வந்தவுடன் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோ வாங்க ரூபாய் 25000 மானியம் வழங்கப்படும்.
  • அனைவருக்கும் வீடு ( அம்மா வீடு)

ALSO READ | வாய்ப்பு கிடைக்காத அதிருப்தி; பாஜவின் இணைந்தார் திமுக MLA சரவணன்

  • ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்
  • முதியோர் உதவி தொகை 2000 ரூபாயாக உயர்வு.
  • தமிழ் கட்டாயப்பாடம்
  • கல்விக்கடன் தள்ளுபடி
  • இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை. 
  • அமைப்புசார தொழிலாளர்களுக்கு ரூ.10000 வட்டியில்லா கடன்
  • வேலை இல்லாத இளைஞர்களுக்கு இரட்டிப்பு ஊக்கத்தொகை 
  • இளைஞர்களுக்கு குறைந்தவட்டியுடன் தொழில் தொடங்க நிதியுதவித் திட்டம்.
  • 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம்.
  • அங்கன்வாடி, தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என அனைத்து மாணாக்கர்களுக்கும் தினமும் 200 மிலி பால்/ பால் பவுடர்
  • விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 7,500 ரூபாய் உழவு மானியம்
  • நெசவாளர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை கடன்
  • ஏழை திருமண தம்பதிகளுக்கு சீர்வரிசை இலவசமாக அரசே வழங்கும்.
  • அனைத்து மாவட்டங்களிலும் மினி ஐ.டி.பார்க்.
  • மகப்பேறு விடுப்பு காலம் 12 மாதங்களாக உயர்த்தப்படும் 
  • மதுபானக் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும்.
  • மதுரை விமான நிலையத்திற்கு பச்ம்பொன் முத்துராமலிங்கம் அவர்களின் பெயர்.
  • கட்டணம் இல்லாமல் லைசன்ஸ் மற்றும் ஓட்டுனர் பயிற்சி.
  • அனைவருக்கும் இலவச சூரிய சக்தி மின் அடுப்பு.
  • இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படும்.
  • அனைத்து மாணவர்களுக்கும் 2 ஜிபி டேட்டா
  • மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்கப்படும்.
  • மதுக்கடைகள் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும்

ALSO READ | TN Assembly Election 2021: பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News