திமுக இளைஞரணி மாநாடு நமுத்துப்போன மிச்சர்... அண்ணாமலை காட்டம் - கூட்டணி குறித்தும் சூசகம்!

Annamalai On DMK: திமுக இளைஞரணி மாநாடு நமுத்துப்போன மிச்சர் என்றும் அதை யாரும் சாப்பிடவில்லை என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 23, 2024, 04:37 PM IST
  • அதிமுகவுக்கு எம்ஜிஆர் போல், பாஜகவுக்கு பிரதமர் மோடி - அண்ணாமலை
  • திருச்சி பிரதமரின் இதயத்தில் உள்ளது - அண்ணாமலை
  • முதல்வர் தற்போது பலவீனம் அடைந்து விட்டார் - அண்ணாமலை
திமுக இளைஞரணி மாநாடு நமுத்துப்போன மிச்சர்... அண்ணாமலை காட்டம் - கூட்டணி குறித்தும் சூசகம்! title=

Annamalai On DMK: திருச்சி விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"என் மண் என் மக்கள் நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவர் பங்கேற்க வேண்டும் என்பது எங்களது விருப்பம்.

பாஜகவின் கதவு, ஜன்னல் திறந்திருக்கிறது...

கே.பி முனுசாமி பேசுவது சரியா? கே பி முனுசாமிக்கு அண்ணாமலை மீது வன்மம். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அதிமுகவுக்கு உள்ளது போல பாஜகவுக்கு மோடிதான். மற்ற தலைவர்கள் பலர் உருவாகலாம், தமிழகத்தில் முதலமைச்சர் வேட்பாளர்களின் பலர் உள்ளனர். ஆனால் மோடி போல் உருவாக்க முடியாது. 20 கோடி தொண்டர்களை தாண்டிவிட்டோம்.

தமிழகத்தில் இரண்டு கட்சிகள்தான் இருக்க வேண்டும். திமுக,அதிமுக இரண்டும் பங்காளிகள். நூற்றுக்கு 4 மார்க்கும், 5 மார்க்கும் எடுத்தவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்  நூற்றுக்கு நூறு எடுத்த மோடி எங்கே இருக்கிறார் என்பதை அவர்கள் அறியவில்லை. பாஜக மீது உள்ள எதிர்ப்பை விட அண்ணாமலை மீதான வன்மத்தை நான் ரசிக்கிறேன்.

மேலும் படிக்க | கோயம்பேடா... கிளாம்பாக்கமா... கரார் காட்டும் அமைச்சர் - பயணிகளுக்கு தொடரும் குழப்பம்!

என்டிஏ கூட்டணியை உருவாக்கியது பாஜகதான், அதிமுக இல்லை. அது தண்ணியைப் போல் நீரோட்டமாக உள்ள கூட்டணி, என்டிஏ கூட்டணியில் தற்போது கதவு, ஐன்னல் திறந்து உள்ளது. மோடியை பிரதமராக ஏற்றுக் கொள்பவர்கள் தாராளமாக இணையலாம்.

நமத்துப்போன மிச்சர்

திமுக இளைஞர் மாநாட்டை பொருத்தவரை குடும்பத்திற்காக குடும்பத்தினர் நடத்திய மாநாடு. இயற்றிய தீர்மானத்தில் ஒன்றுக்கு கூட தகுதி இல்லை. திமுக தொண்டர்கள் நீட்டுக்கு எதிரான கையெழுத்திட்ட அஞ்சலட்டையை கூட சேலம் மாநாட்டில் தூக்கி எறிந்துவிட்டு சென்று விட்டார்கள். தமிழகத்தை திமுகவிடம் இருந்தும், திமுக குடும்பத்தினரின், அராஜகம் மற்றும் அடாடிவடியிடம் இருந்து மீட்பதுதான் பாஜகவின் கொள்கை.

சிறுமியை துன்புறுத்தியதாக திமுக எம்எல்ஏ குடும்பத்தினரை ஏன் இதுவரையிலும் கைது செய்யவில்லை. இது போன்று தான் கடலூர் எம்பி ரமேஷ் மீதும் நடவடிக்கை இல்லை. சமூக நீதியை பற்றி பேச திமுகவுக்கு லாய்க்கு இல்லை. ஒற்றைக் கட்சி ஆட்சியில் இருக்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள். ஆனால் ஒற்றை குடும்பம் ஆட்சியில் இருக்கக் கூடாது என்பதுதான் மக்கள் விருப்பம். இளைஞர் அணி மாநாடு என்பது நமத்துப்போன மிச்சர், அதை யாரும் சாப்பிடவில்லை. குப்பைக் கூடைகள் நிரம்பியது தான் திமுக இளைஞரணி மாநாட்டின் சாதனை.

மேலும் படிக்க | முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தின் முக்கிய முடிவுகள்

தமிழகத்தில் திமுகவின் ஊழல் பற்றி தமிழக பத்திரிக்கையாளர்கள் ஏன் 31 மாதமாக பேசவில்லை?. எங்களது எதிரி திமுக தான், எங்கள் இரண்டு பேருக்கும் மட்டும்தான் போட்டி. மத்தியில் ஆளும் பாஜகவுக்கு மாநிலத்தில் ஆளும் திமுகவுக்கும் தான். தனி மனிதனாக அரசியல் கோட்பாட்டுக்கு உட்பட்டு நான் பேசிக் கொண்டிருக்கிறேன்.

2ஜி ஃபைல்ஸ்

திமுக 2ஜி ஃபைல்ஸ் போய்க்கொண்டுள்ளது, இரண்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. முழுமையாக வெளியிட்ட பின்னர் திமுக ஃபைல்ஸ் குறித்து பேசுவேன். பிஞ்சு போன உதிரிகள் எல்லாம் சேர்ந்து இந்தியா கூட்டணியாக வந்தார்கள். அவர்கள் நாட்டில் முடிவு எடுக்க முடியாது. அது அபாயம் அதை தடுக்க தான் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க தொடங்கி உள்ளார்கள். 

திருச்சி மீது பாசம் என்பதால்தான் மோடி இரண்டு முறை வந்துள்ளார். குமாரமங்கலம் திருச்சியில் இருந்த போது நம்பிக்கை இருந்த திருச்சியை மறுபடியும் தமிழகத்தின் முக்கிய நகராக மாற்ற வேண்டும், ஸ்ரீரங்கத்தில் நடந்த கம்பராமாயண நிகழ்வு என்பது உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன் என பிரதமர் கூறியுள்ளார். ஆகவே திருச்சி பிரதமர் இதயத்தில் உள்ளது. 

முதல்வர் ஸ்டாலின் மோசமாக திமுக சரித்திரத்தில் தோற்றுள்ளார். 2014இல் ஜீரோ பல எம்பி எலெக்ஷனில் பூஜ்ஜியம் பெற்றுள்ளனர். வாக்கு சதவீதம் 20% ஆக இருந்தது. முதல்வர் தற்போது பலவீனம் அடைந்து விட்டார், மனதளவில் பாஜக ஜெயிக்க ஆரம்பித்து விட்டது என எண்ண தொடங்கிவிட்டார். நான் தாடி வளர்ப்பதற்கு சாமிக்கு ஒரு நேர்த்திக்கடன் உள்ளது" என்றார்.

மேலும் படிக்க | காந்தி இல்லை.. நேதாஜியே சுதந்திரத்திற்கு காரணம்.. ஆளுநர் ரவி சர்ச்சை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News