அழுதுக்கொண்டிருந்த பெண்..அரவணைக்கும் குதிரை-நெகிழ்ச்சியான வைரல் வீடியோ!

Viral Video Of A Horse : ஒரு குதிரை, அழும் தனது உரிமையாளரை அரவணைக்கும் வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Written by - Yuvashree | Last Updated : Sep 16, 2024, 07:14 PM IST
  • எமோஷனல் ஆன உரிமையாளர்
  • கட்டிப்பிடித்த குதிரை..
  • வைரலாகும் வீடியோ..
அழுதுக்கொண்டிருந்த பெண்..அரவணைக்கும் குதிரை-நெகிழ்ச்சியான வைரல் வீடியோ! title=

Viral Video Of A Horse : மனிதர்களை விட, விலங்குகள் மிகவும் தன்மையானவை. இவற்றிடம் இருக்கும் இறக்க குணம் கூட, பல சமயங்களில் மனிதர்களிடம் இருப்பதில்லை என பலர் கூற கேட்டிருப்போம். இவற்றிற்கு, தன் உரிமையாளர் எந்த மூடில் இருக்கிறார், அவர் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான கட்டத்தில் இருக்கிறாரா, அவருக்கு உதவி தேவைப்படுகிறதா என்பது குறித்து அவைகளுக்கு தெரியும். அந்த வகையில், ஒரு குதிரை அழும் தனது உரிமையாளரை ஆறுதல் படுத்தும் வீட்யோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ: 

ஒரு பெண், வாசலில் அமர்ந்து அழும் தருவாயில் இருக்கிறார். இவர் அருகே இரண்டு குதிரைகள் நிற்கின்றன. அதி ஒரு குதிரை, அவரது முதுகில் தன் தலையை வைத்து தன் மீது சாய வைக்கிறது. 

அப்படியே சாயும் அந்த பெண் உடைந்து அழுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலர், கண்ணீர் இமோஜிக்களை பதிவிட்டு, “இந்த மிருகத்திற்கு இருக்கும் மனசு கூட மனுஷ பயலுங்களுக்கு இல்லையே..” என்று கூறி வருகின்றனர். 

மேலும் படிக்க | ஒரு நொடி தாமதத்தால் உயிர் பிழைத்த அதிர்ஷ்டசாலி! நிலச்சரிவில் இருந்து தப்பித்த வீடியோ வைரல்...

குதிரைகள் பற்றி..

>மனிதர்களுக்கு பிடித்த விலங்குகளுள் ஒன்று, குதிரை. இவற்றிற்கு, மனிதர்களை பிடிக்க பல்வேறு காரணங்கள் உண்டு.

>குதிரைகள், அனைவருடனும் எளிமையாக பழகும் குணம் கொண்டவை.

>குதிரைகள், ஒரு நல்ல மனிதரை பார்க்கும் போது அப்படியே அடையாளம் கண்டு கொள்ளுமாம்.

>தங்களை ஒரு மனிதர் நன்றாக நடத்துகிறார் என்றால், அவருடன் இவற்றிற்கு உணர்வு ரீதியான பந்தம் இருக்குமாம். 

>குதிரை ஓட்டுபவர்கள், இவற்றை எப்படி நடத்த வேண்டும் என்று நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள்.

>தனக்கு ஒருவரிடம் பாதுகாப்பான உணர்வு ஏற்பட்டால் மட்டுமே, குதிரை அவரை மேலே ஏற அனுமதிக்குமாம்.

>தனது பராமரிப்பாளர்களிடம் பாசமாக நடந்து கொள்ளும் விலங்குகளுள் ஒன்று, குதிரை என்பது ஆச்சரியத்திற்குரிய விஷயமாகும். 

மேலும் படிக்க | ஆம்புலன்ஸில் சென்ற உரிமையாளர்! பின்னால் ஓடிய நாய்! மனதை கவரும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News