இருளர் இன பழங்குடியின மக்கள்... நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வரும் பொருளாதாரத்திற்கு மத்தியில் இன்னமும் இருளர் இன மக்களின் வாழ்வாதாரம் முன்னேற்ற பாதையை நெருங்காமலேயே உள்ளது. இவர்களின் பொருளாதாரம், கல்வி முன்னேற்றம் போன்றவற்றிற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
வேட்டையாடுவது, மீன் மற்றும் பாம்பு பிடிப்பது போன்றவை இருளர் இன மக்களின் முக்கிய தொழிலாகும். அதிலும் பாம்பு பிடிப்பதில் இருளர் இன மக்கள் மிகவும் திறமை படைத்தவர்கள். கொடிய விஷம் கொண்ட பாம்பின் விஷத்தன்மை மருந்து பொருட்கள் தயாரிக்கப் பெரிதும் பயன்படுகிறது. அதுவே இருளர் இன மக்களின் முக்கிய வருமானத்தை ஈட்டி கொடுக்கும். அதற்காக இருளர்கள் பாம்பு பிடிப்போர் கூட்டுறவு சங்கம் தொடங்கி சென்னை அடுத்த முட்டுக்காட்டில் செயல்பட்டு வருகிறது.
இந்த சங்கத்தில் பதிவு செய்த இருளர் இன மக்கள் பாம்பு பிடித்து வந்தனர். பிடிபட்ட பாம்பிலிருந்து எடுக்கும் விஷத்தை அரசின் உதவியுடன் ஆராய்ச்சி மையத்திற்கும், தனியார் மருந்து நிறுவனங்களுக்கும் விற்பனை செய்து வந்தனர். வன உயிரின சட்டப்படி இதற்கு அரசிடம் அனுமதி பெற வேண்டும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்துக்கு அரசு உரிமம் வழங்கும். இந்நிலையில் பல்லுயிர் இனப்பெருக்கம் காரணமாக வன உயிரின சட்டத்தால் பாம்பு பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் விளைவாக இருளர் இன மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியது.
கடந்த 4 வருடங்களாக பாம்பு பிடிக்க அனுமதி வழங்க இருளர் இன மக்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் தற்போது இருளர் இன மக்களின் வாழ்வாதாரத்திற்கு கைகொடுக்கும் வகையில் தமிழக அரசு பாம்பு பிடிப்பதற்கான அனுமதியை வழங்கி உள்ளது. அதற்கான அரசாணையையும் பிறப்பித்து உள்ளது. அதில், நடப்பாண்டில் மொத்தம் 5 ஆயிரம் பாம்புகளை பிடிக்கவும், விஷத்தை விற்கவும் இருளர் இன மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | வா மோதி பாத்தரலாம்..! பாம்பை ஓட விட்ட கீரி!
நல்ல பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன் போன்ற பாம்பு இனங்களில் இருந்து எடுக்கும் விஷம், விஷ முறிவு மருந்துகள் தயாரிக்கப்பயன்படுகிறது. அதிகபட்சமாக கண்ணாடி வீரியம் பாம்பின் விஷம் ஒரு கிராம் ரூ.60ஆயிரத்திற்கும், நாகப்பாம்பின் விஷம் ரூ.22 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இருளர் இன மக்களின் வாழ்வாதாரம் மீண்டெழும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க | மானை மடக்கிய மலைப்பாம்பு: கேமராவில் கைதான திக் திக் நிமிடங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR