பெரியார் இல்லையென்றால், தனது மகளுக்கு 2வது திருமணம் ரஜினிகாந்த் செய்திருக்க முடியுமா?

பெரியார் இல்லையென்றால், தனது மகளுக்கு 2வது திருமணம் ரஜினிகாந்த் செய்திருக்க முடியாது என தமிழக அமைச்சர் செல்லூர் கே. ராஜூ கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 24, 2020, 08:21 PM IST
  • ரஜினிகாந்த் திராவிட இயக்கத்தின் தந்தை பெரியார் குறித்த கருத்துக்களால் சூழப்பட்டு உள்ளார்.
  • பெரியார் குறித்த ரஜினிகாந்தின் அறிக்கையை குறிவைத்த தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ.
  • பெரியார் இல்லாதிருந்தால், ரஜினிகாந்த் தனது மகளின் இரண்டாவது திருமணத்தை எப்படி நடத்திருக்க முடியும்? செல்லூர் ராஜு கேள்வி
  • விதவை மறுமணம், பெண்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான சுரண்டலுக்கு எதிராக பெரியார் போராடினார்.
பெரியார் இல்லையென்றால், தனது மகளுக்கு 2வது திருமணம் ரஜினிகாந்த் செய்திருக்க முடியுமா? title=

புது டெல்லி: திராவிட இயக்கத்தின் தந்தை ஈரோட் வெங்கட்ட நாயக்கர் ராமசாமி என்கிற "தந்தை பெரியார்" குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை மற்றும் விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது. அதிமுக தரப்பில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பல அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் தமிழக அமைச்சர் செல்லூர் கே. ராஜூவும் இணைந்துள்ளார். செய்தியார்களிடம் பேசிய அவர், "ரஜினிகாந்த் தனது மகளின் இரண்டாவது திருமணத்தை எப்படி நடத்த முடிந்தது? பெரியாரின் முன்முயற்சியால் இவை அனைத்தும் சாத்தியமாகியுள்ளன. எனவே பெரியாரை அவமதிப்பது பொருத்தமானதல்ல எனக் கூறியுள்ளார்.

குழந்தை திருமணம், தேவதாசி முறை ஒழிப்பு, பெண்கள் மற்றும் தலித்துகள் சுரண்டலுக்கு எதிராகவும், விதவை மறுமணம், பெண்களுக்கு சம உரிமை, சமூக நீதி போன்ற காரணங்களுக்கு பெரியார் போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக தீமைகளுக்கு எதிராக அவர் கடுமையாக போராடினார். பெரியார் குறித்து ரஜினிகாந்த் அளித்த அறிக்கைகளும் தேவையில்லை என்று தமிழக அமைச்சர் ராஜு கூறினார். 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை இன்று எழுப்பப்பட தேவையில்லை. பெரியார் சாதி மற்றும் மதவாதிகளை எதிர்த்தார். அவர் சமூகத்தின் அனைத்து வகையான தீமைகளையும் எதிர்த்துப் போராடினார் என்றார்.

நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் -ரஜினிகாந்த்
"தந்தை பெரியார்" குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், கடந்த ஜனவரி 21 ஆம் தேதி சென்னை போயஸ்கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்பொழுது அவர், "துக்ளக் விழாவில் 1971 ஆம் ஆண்டில் சேலத்தில் நடந்த பேரணி குறித்து நான் பேசிய பேச்சு சர்ச்சையாக உள்ளது. இல்லாத ஒன்றை கற்பனையான விஷயத்தை நான் கூறவில்லை. கேள்விப்பட்டது மற்றும் அவுட்லுக் பத்திரிகையில் வந்ததைத்தான் கூறினேன். இதற்கு நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுகிறார்கள். நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்பதை தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன். நான் பார்த்ததை தான் சொன்னேன். அவர்கள் பார்த்ததை அவர்கள் கூறுகிறார்கள். இதை இனியும் பெரிதுப்படுத்த கூடாது. என செய்தியாளர்களிடம் கூறினார். 

சவுந்தர்யா ரஜினிகாந்த் 2019 இல் மறுதிருமணம் செய்து கொண்டார்:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த், நடிகரும் தொழிலதிபருமான விசாகன் வணங்காமுடியை 2019 இல் திருமணம் செய்து கொண்டார். சவுந்தர்யா முன்னதாக தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாரை 2010 இல் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் "வேதா" என்ற மகன் உள்ளார். 2017 ஆம் ஆண்டில், இருவரும் பரஸ்பர ஒப்புதலால் விவாகரத்து செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News