அங்கொட லொக்காவின் பலே தந்திரம்.. அடையாளத்தை மறைக்க ப்ளாஸ்டிக் சர்ஜரி

இலங்கை தாதாவான அங்கொட லொக்கா  தன் அடையாளத்தை மறைக்க ப்ளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டது விசாரணையில் அம்பலம்

Written by - ZEE Bureau | Last Updated : Aug 7, 2020, 06:04 PM IST
  • இலங்கையில் இருந்து தப்பி 2 ஆண்டுகளாக, பிரதீப் சிங் என்ற பெயரில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, கோயம்புத்தூரில் தங்கி வந்தார்.
  • லொக்கா, சேரன் மா நகரில் உள்ள ராயல் ஃபிட்னஸ் க்ளப் என்ற ஜிம்மிற்கு மாலையில் செல்லும் வழக்கம் இருந்ததாக போலீஸார் கூறினர்.
  • இலங்கை தாதாவின் கதை, சினிமா காட்சியை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு, பல பல திருப்பங்கள் நிறைந்த கதையாக உள்ளது.
அங்கொட லொக்காவின் பலே தந்திரம்.. அடையாளத்தை மறைக்க ப்ளாஸ்டிக் சர்ஜரி

மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கையை சேர்ந்த அங்கட லொக்கா, தன்னை யாரும் அடையாளம் கண்டு பிடிக்காமல்  இருக்க, பேரை மட்டும் மாற்றிக் கொள்ளவில்லை, தன் உருவத்தையும் மாற்றிக் கொண்டுள்ளது விசாரணையில் அமபலமாகியுள்ளது.

இலங்கையில் இருந்து தப்பி 2 ஆண்டுகளாக, பிரதீப் சிங் என்ற பெயரில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, கோயம்புத்தூரில் தங்கி வந்தார். அவர் கடந்த ஜூலை மாதம் 3ம் தேதி மர்மமான உயிரிழந்தார்.

ALSO READ | பழத்தோட்டம் அருகில் கடத்தப்பட்ட வீரரின் உடைகள்: பதட்டத்தில் ஷோபியான்!!

அவரது மரணத்தில் பல விதமான சந்தேகங்கள் எழும்பியதால், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீஸார், பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

 இலங்கையில், கொலை, கொள்ளை, போதை பொருள் கடத்தல் என  பல விதமான குற்ற செயல்களில் ஈடுபட்ட அங்கொட லொக்கா, தனது அடையாளத்தை மறைக்க, மருத்துவர்களை அணுகி, தான் படங்களில் நடிக்க விரும்புவதால், தனது மூக்கை திருத்திக் கொள்ள ப்ளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். இதை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி, கோயம்புத்தூரில் ஆர் எஸ் புரத்தில் உள்ள  தனியார் மருத்துவமனியில் அவருக்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டு, பிப்ரவரி 22ம் தேதி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

தனது முக அமைப்பை மாற்றிக் கொண்டு, அடையாளத்தை மறைத்து வெளிநாடுகளுக்கு தப்பி செல்லும் திட்டம் இருந்ததாக போலீஸார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ALSO READ | பயணிகளின் கனிவான கவனத்திற்கு: சில ரயில்களின் அட்டவணை மற்றும் வழித்தடத்தில் மாற்றம்!!

நாம் பொதுவாக சினிமாவில் தான் இது போன்ற சம்பவங்களை பார்த்திருப்போம். ஆனால், அவருடைய வரலாற்றை கிளறினால், சினிமா காட்சியை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு, பல பல திருப்பங்கள் நிறைந்த  கதையாக உள்ளது.

மேலும் லொக்கா, சேரன் மா நகரில் உள்ள  ராயல் ஃபிட்னஸ் க்ளப் என்ற ஜிம்மிற்கு மாலையில் செல்லும் வழக்கம் இருந்ததாகவும், ஆனால், அவர் இன்ஸ்ட்ரக்க்டரை தவிர யாரிடமும் பேசியதில்லை எனவும் போலீஸார் தெரிவித்தனர்.

More Stories

Trending News