தொடர்ந்து 6வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைவு!!

சென்னையில் பெட்ரோல் விலை 6 காசுகள், டீசல் விலை 8 காசுகள் குறைந்துள்ளது.

Last Updated : Feb 3, 2020, 09:52 AM IST
தொடர்ந்து 6வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைவு!! title=

சென்னையில் பெட்ரோல் விலை 6 காசுகள், டீசல் விலை 8 காசுகள் குறைந்துள்ளது.

நாட்டின் எண்ணெய் இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்கிற்கு மத்திய கிழக்கு நாடுகளையே சார்ந்துள்ளன. குறிப்பாக ஈராக் மற்றும் சவுதி அரேபியா ஆகியவை இதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

நாட்டின் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் உள்நாட்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தவறாமல் மதிப்பாய்வு செய்கின்றன. எரிபொருள் நிலையங்களில் காலை 6 மணி முதல் விலை திருத்தங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பெட்ரோல், டீசல் விலைகளானது கடந்த ஜூன் 17, 2017 முதல் நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் நடைமுறை இந்தியாவில் கொண்டுவரப்பட்டது. இது ஒவ்வொரு வாரமும் பெட்ரோல், டீசல் விலையை மறுசீரமைக்கும் முந்தைய நடைமுறையிலிருந்து மாற்றம் செய்யப்பட்ட நடைமுறையாகும்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. அதன்படி நேற்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.75.95 க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.69.89 க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னையில் பெட்ரோல் விலை 6 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.75.89 ஆகவும், டீசல் விலை 8 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.69.81 ஆகவும் உள்ளது. 

Trending News