திமுகவின் நாடாளுமன்றக் குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு..!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற எம்.பி-க்களின் கூட்டத்தில் டி.ஆர்.பாலு அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்!!

Last Updated : May 25, 2019, 07:50 PM IST
திமுகவின் நாடாளுமன்றக் குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு..!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற எம்.பி-க்களின் கூட்டத்தில் டி.ஆர்.பாலு அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்!!

சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்.பி-களின் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், தி.மு.க. எம்.பி.க்களான, ஆ.ராசா, கனிமொழி, தயாநிதி மாறன் மற்றும் திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் திமுக நாடாளுமன்றக் குழு தலைவராக டி.ஆர்.பாலுவும் துணைத் தலைவராக கனிமொழியும் தேர்வு செய்யப்பட்டார்கள். திமுகவின் மக்களவைக் குழு கொறடாவாக ஆ.ராசாவும் பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கமும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

மக்களவைக்கு ஆறு முறையும், மாநிலங்களைவைக்கு ஒரு முறையும் தேர்வானவர் டி.ஆர்.பாலு. ஸ்ரீபெரும்புத்தூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு டி.ஆர்.பாலு வெற்றி பெற்றார். மாநிலங்களவை குழு தலைவராக திருச்சி சிவாவும், கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

More Stories

Trending News