பேருந்து கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி, திருநங்கை : வெளுத்துவிட்ட போலீஸ்

கேரளா மற்றும் கரூர் என இருவேறு சம்பவங்களில் பேருந்து கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டன.

Written by - அதிரா ஆனந்த் | Last Updated : May 12, 2022, 12:38 PM IST
  • கேரளாவில் பேருந்து கண்ணாடி உடைப்பு
  • குடிபோதை ஆசாமி உடைத்தார்
  • கரூரில் திருநங்கைகள் கண்ணாடியை உடைத்தனர்
பேருந்து கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி, திருநங்கை : வெளுத்துவிட்ட போலீஸ் title=

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள புனலூர் பேருந்து நிலையத்தில் குடிபோதையில் மேல் சட்டை அணியாமல் வந்த இளைஞர் ஒருவர் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து ஒன்றின் மீது கல் எறிந்து முன் பக்க கண்ணாடியை உடைத்துள்ளார். இதில் கோபமடைந்த பேருந்து நிலைய காவலாளி அந்த இளைஞனுக்கு அடியும் கொடுத்துள்ளார்.

தொடர்ந்து கொல்லம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில் அஞ்சல் , பாரதிபுரம் பகுதியை சார்ந்த மணிக்குட்டன் என்பவர் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் அந்த இளைஞரை கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகளை அங்கிந்தவர்கள் தங்களது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி பேசு பெருளாக மாறி வருகிறது.

 

 

மேலும் படிக்க | Shocking : உடன் படிக்கும் மாணவியை கட்டிப்போட்டு அத்துமீறிய 8ஆம் வகுப்பு மாணவர்கள் : எங்கே போகுது உலகம்?

அதேபோல கரூரில் நள்ளிரவில் திருநங்கைகளுக்கும், பேருந்து ஓட்டுநர், நடத்துனர், பயணிகளுடன் ஏற்பட்ட பிரச்சினையில் 2 அரசு பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. கலவரத்தை தடுக்க வந்த போலீசாருக்கும், செய்தியாளர்களும் அடி விழுந்ததால் சுமார் 3 மணி நேரமாக பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வராததால் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.

கரூர் மாநகரின் மையப் பகுதியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இப்பேருந்து நிலையத்திற்குள் இரவு 10 மணியளவில் அரசு நகர பேருந்தில் ஏறிய திருநங்கைகள் யாசகம் கேட்டுள்ளனர். அப்போது பயணிக்கும், திருநங்கைகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஓட்டுநரும் நடத்துனரும் பயணிகளுக்கு ஆதரவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதமும், அடிதடியும் நடந்துள்ளது. அப்போது திருநங்கைகள் பேருந்து நிலையத்திற்குள் இருந்த 2 அரசு பேருந்துகளின் முன்பக்க கண்ணாடிகளையும் பேருந்து நிலையத்திற்குள் இருந்த அலுவலகத்தின் கண்ணாடியையும் உடைத்தனர். 

Bus Broke

மேலும் படிக்க | மும்தாஜ் வீட்டில் இருந்து பணிப்பெண் மீட்பு - நடந்தது என்ன ?

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரம் காரணமாக பயணிகளும், பொதுமக்களும் அலறியடித்துக் கொண்டு பேருந்து நிலையத்தை விட்டு வெளியே ஓடினர். அப்போது அங்கு வந்த போலீசார் திருநங்கைகளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த கலவரத்தினை செல்போனில் படம் எடுத்த போலீசாரும், பயணிகளும், தனியார் தொலைக்காட்சி செய்தியாளரும் தாக்கப்பட்டனர். இந்தக் கலவரம் காரணமாக சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வரவில்லை.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News