தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!!

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!

Last Updated : May 17, 2019, 11:19 AM IST
தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!! title=

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!

தமிழகத்தின் உள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும், அப்போது 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் வெயில் 100 டிகிரிக்கும் மேல் பதிவாகி வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், கரூர், நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய 13 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. அத்துடன் காற்று 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றனர்.

10 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தலா 106 டிகிரி பதிவானது. வேலூர், திருச்சியில் 105, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, கரூர் மாவட்டம் பரமத்தியில் தலா 104, சேலத்தில் 101, சென்னை, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தலா 100 டிகிரி வெயில் வியாழக்கிழமை பதிவானது.

 

Trending News