ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சீருடை மாற்றம்!!

ஏற்கனவே 9 முதல் 12ஆம் வகுப்புக்கு சீருடை மாற்றப்பட்ட நிலையில் 1 முதல் 5ஆம் வகுப்புக்கும் மாற்றம்!!

Last Updated : Jun 8, 2018, 02:57 PM IST
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சீருடை மாற்றம்!! title=

ஏற்கனவே 9 முதல் 12ஆம் வகுப்புக்கு சீருடை மாற்றப்பட்ட நிலையில் 1 முதல் 5ஆம் வகுப்புக்கும் மாற்றம்!!

புதிய கல்வித்திட்டத்தின் கீழ் தமிழக பள்ளிகளில் பல புதிய திட்டங்கள், கட்டுபாடுகள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய தொழிற்கல்வி பாடத்திட்டங்களை புகுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் முறை மூலம் வருகைப்பதிவேடு குறிக்கப்படும் என தமிழ அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மாணவர்களுக்கும் வருகைப் பதிவேட்டில் புதிய தொழில்நுட்பத்தினை பள்ளி கல்வித்துறை புகுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் பள்ளிகளில் நடப்பாண்டு முதல் புதிய பாடத்திட்டம் படிப்படியாக புகுத்தப்படவுள்ளது. அதன்படி முதற்கட்டமாக நடப்பாண்டில் 1 முதல் 9-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. அதே வேலையில் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில், பள்ளிகள் இயங்கும் நாட்கள் 170-லிருந்து 185 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்களுக்கு வழங்கப்படும் ஸ்மார்ட் அட்டைகளில் ஆதார் எண், ரத்த வகை, தொலைபேசி எண் ஆகிய விவரங்கள் இணைக்கப்படும் எனவும், பள்ளி மாணவர்களின் வருகைப்பதிவினை மதியத்திற்குள் சென்னை தலைமை அலுவலகத்திற்கு வந்துசேர்ந்துவிடும் படி தொழில்நுட்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அறிவித்திருந்த நிலையில் தற்போது 9 முதல் 12 ஆம் வகுப்புக்கு சீருடை மாற்றப்பட்ட நிலையில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் சீருடை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அதில், 1 முதல் 5 ஆம் வகுப்புவரை அக்வா க்ரீன்,மெடோ க்ரீன் வண்ணத்தில் புதிய வண்ண சீருடை இலவசமாக தரப்படும். மேலும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிப்போருக்கு லைட் பிரவுன், மெரூன் வண்ணத்தில் சீருடை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர். 

 

Trending News