நிவர் புயல்; 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!

நிவர் புயல் எதிரொலி காரணமாக இன்று கடலூர், தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Last Updated : Nov 24, 2020, 09:53 AM IST
    1. தமிழகம், புதுச்சேரியில் நிவர் புயல் வங்கக்கடலில் உருவானது.
    2. நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய அதிக கனமழை பெய்யும்.
    3. நிவர் சூறாவளி புதன்கிழமை காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிவர் புயல்; 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்! title=

சென்னை: நவம்பர் 25 ஆம் தேதி முழு வீச்சுடன் தாக்கவிருக்கும் நிவர் சூறாவளியை தமிழகம் எதிர்நோக்கியுள்ளது. நிவர் சூறாவளி புதன்கிழமை காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சென்னை வானிலை ஆய்வு மையம் (IMDவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகம் (Tamil Nadu), புதுச்சேரியில் (Puducherry) நிவர் புயல் வங்கக்கடலில் உருவானது. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக வலுப்பெற்றுள்ளது. சென்னைக்கு கிழக்கே சுமார் 470 கி.மீ. தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. 

Image

 

ALSO READ |  நெருங்குகிறது நிவர்: தமிழகத்தில் red alert, பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டது NDRF

நிவர் புயல் இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும். மேலும் மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே நாளை மாலை தீவிர புயலாக நிவர் புயல் (Nivar Cylone) கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image

இதற்கிடையில் நிவர் புயலால் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய அதிக கனமழை பெய்யும். சென்னை, காஞ்சீபுரம், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை முதல் மிக அதிக கனமழையும் பெய்யக்கூடும். 

 

ALSO READ |  Cyclone Nivar Alert ஏழு மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து நிறுத்தம் : தமிழக அரசு அறிவிப்பு

 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News