சூர்யாவுடன் முதல் முறையாக இணையும் கதாநாயகி.. எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் "வாடிவாசல்"

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள "வாடிவாசல்" படம் குறித்து ஒரு முக்கியச் செய்தி வெளியாகி உள்ளது. 

Written by - ZEE Bureau | Last Updated : Sep 8, 2020, 12:25 AM IST
  • வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள படம் "வாடிவாசல்".
  • "வாடிவாசல்" படம் குறித்து ஒரு முக்கியச் செய்தி வெளியாகி உள்ளது.
  • நடிகர் சூர்யாவுக்கு கதாநாயகியாக ஆண்ட்ரியா நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
சூர்யாவுடன் முதல் முறையாக இணையும் கதாநாயகி.. எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் "வாடிவாசல்"

சினிமா செய்திகள்: வெற்றிமாறன் (Vetrimaaran) இயக்கத்தில் நடிகர் சூர்யா (Suriya) நடிப்பில் உருவாகவுள்ள படம் "வாடிவாசல்". நாட்டில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் (COVID-19 Pandemic) காரணமாக படப்பிடிப்பு தள்ளி போய் உள்ளது. மறுபுறம் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் (Vaadivaasal) நாவல் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. மேலும் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் வெற்றிமாறனின் படைப்பும் ஒரு முக்கியக்காரணம். அதேபோல கலைபுலி தாணு (Kalaipuli Thanu) தயாரிப்பில் வெளிவர உள்ளது.

இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் வேளையில், நடிகர் சூர்யாவுக்கு யார் ஜோடியாக நடிப்பார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதனைத்தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் நடிகர் சூர்யாவுக்கு கதாநாயகியாக யார் நடிக்கவுள்ளார் என ரசிகர்கள் கேள்விகளை படக்குழுவிடம் கேட்டு வருகின்றனர். 

இந்தநிலையில், "வாடிவாசல்" படம் குறித்து ஒரு முக்கியச் செய்தி வெளியாகி உள்ளது. அந்த செய்தி என்னவென்றால், நடிகர் சூர்யாவுக்கு கதாநாயகியாக ஆண்ட்ரியா (Actress Andreah Jeremiah) நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. ஆனால் இதுக்குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

ALSO READ |

ஒருவேளை இது உண்மை என்றால், முதல் முறையாக சூர்யா மற்றும் ஆண்ட்ரியா (Andreah Jeremiah) இணைந்து நடிக்கும் முதல் படம் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் "வாடிவாசல்" திரைப்படத்திற்கு அந்த பெருமை கிடைக்கும். விரைவில் தமிழக அரசு (TN Govt) படப்பிடிப்புக்கு முழு ஒப்புதல் அளித்த பிறகு, "வாடிவாசல்" படத்தின் கவுண்ட்டவுன் ஸ்டார்ட் ஆகும்.

More Stories

Trending News