திருமாவளவன் வாக்குசேகரிப்பு
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டார பகுதிகளில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் திருமாவளவன் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காரை, கொளக்காநத்தம், கொளத்தூர், ஆதனூர், கூத்தூர், மேலமாத்தூர் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட இடங்களில் திறந்தவெளி வாகனத்தில் திருமாவளவன் பிரச்சாரம் செய்தார்.
ஏழைகளுக்கு வரி விதிக்கிறார்
அப்போது பேசிய அவர், மத்திய அரசு ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மூலம் ஏழை எளிய மக்கள் நசுக்கப்படுகிறார்கள் என்றும், அத்தியாவசிய பொருட்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பு போடப்படுவதால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் குற்றம்சாட்டினார். ஆனால் உயர்தட்டு மக்கள் இதனால் பாதிக்கப்படுவதில்லை, காரணம் உயர்த்தட்டு மக்கள் பயன்படுத்தக்கூடிய விலை உயர்ந்த பொருட்களுக்கு வரி விதிப்பே கிடையாது என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.
மேலும் படிக்க | ’மகனுக்கு சீட் இல்லை’ சபாநாயகர் அப்பாவு திமுக தலைமை மீது அதிருப்தியா?
ஜனநாயகம் இருக்காது
தொடர்ந்து பேசிய திருமாவளவன், இந்த முறை மோடி ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் முற்றிலும் மறுக்கப்பட்டு விடும். இதனை முறியடிப்பதற்காகவும் பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்காகவுமே நமது திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், இந்தியா கூட்டணியை உருவாக்கி இருக்கிறார். பல்வேறு எதிர் கருத்துகளுடன் இருந்த இந்தியா கூட்டணி தலைவர்களை ஒன்றிணைத்து இன்று மிகப்பெரிய தலைவராக ஸ்டாலின் விழங்கி வருகிறார். மோடி ஆட்சி வந்து விட்டால் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த100 நாள் வேலை திட்டம் இருக்காது. அம்பானி அதானி போன்ற பெரு முதலாளிகளே செழிப்புடன் இருப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
மோடியை வீட்டுக்கு அனுப்புங்கள்
ஏழை, எளிய மக்கள் வஞ்சிக்கப்படுவார்கள் எனவே நல்லாட்சி மலர்ந்திட பானை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும். 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றால் மோடியை கண்டிப்பாக வீட்டுக்கு அனுப்ப முடியும். எனவே அனைவரும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சின்னமாகிய பானை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று பேசினார். முன்னதாக தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திருமாவளவனுக்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரித்தார்.
மேலும் படிக்க | இன்னும் அதிகமாக செய்வதற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் - கோவையில் அண்ணாமலை பேச்சு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ