சென்னை: சுரங்க நிறுவனமான வேதாந்தா லிமிடெட் (Vedanta Limited) புதன்கிழமை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தது. தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை (Sterlite Plant) திரும்பவும் திறக்க மெட்ராஸ் உயர் நீதிமன்றம் அனுமதி அளிக்காததையடுத்து, அந்த தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தின் தூத்துக்குடியில் (Thoothukudi) ஸ்டெர்லைட் செப்பு கரைக்கும் ஆலையை மீண்டும் திறக்க மெட்ராஸ் உயர் நீதிமன்றம் (Madras high Court) மறுத்துவிட்டது. இது ஏப்ரல் 2018 முதல் மூடப்பட்டுள்ளது. மேலும் ஆலை மூடப்படுள்ளதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த ஆலையை மூட தமிழக அரசு எடுத்த முடிவை எதிர்த்து, வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் காப்பர், மேல் முறையீடு செய்தது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்றும் கோரியது. இந்த ஆண்டு ஜனவரியில் வேதாந்தா நிறுவனத்தின் மேல் முறையீட்டு மனுவின் மீதான தனது உத்தரவுகளை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
ALSO READ: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு: சென்னை HC தீர்ப்பு!!
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், ஸ்டெர்லைட் ஆலையை, பராமரிப்புக்காக மீண்டும் திறக்கக் கோரிய ஒரு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது ஒரு அற்பமான காரணம் என நீதிமன்றம் கூறியது. இருப்பினும், மீண்டும் திறக்கக் கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்ற சுதந்திரத்தை குழுமத்திற்கு வழங்கியது.
தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT), டிசம்பர் 15, 2018 –ல் ஒரு உத்தரவை அளித்தது. இந்த உத்தரவின் படி ஆலையை திரும்பவும் திறக்க நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. எனினும், உச்சநீதிமன்றம் பிப்ரவரி 18 அன்று இந்த உத்தரவை ஒதுக்கியது. தமிழ்நாடு அரசாங்கத்தின் முடிவுக்கு எதிரான மேல்முறையீட்டை ஏற்றுக்கொள்ள என்ஜிடிக்கு அதிகாரம் இல்லை என்று அது கூறியது.
கடந்த ஆண்டு, ஆலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு எதிரான போராட்டத்தின் போது பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் ஆலை மாநில அரசால் மூடப்பட்டது.