சிலம்ப வீரர் விதுன் நவீன்குமார்! 4 வயது சிறுவனின் உலக சாதனை!!

4 வயது சிறுவன் விதுன் நவீன்குமார் 5 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை...  

Edited by - Malathi Tamilselvan | Last Updated : Feb 4, 2022, 07:29 AM IST
  • நோபல் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற தமிழகத்தின் சாதனை சிறுவன்
  • 4 வயது சிறுவனின் உலக சாதனை
  • 5 மணி நேரம் இடைவிடாமல் இரட்டை சிலம்பம் சுற்றிய விதுன்
சிலம்ப வீரர் விதுன் நவீன்குமார்! 4 வயது சிறுவனின் உலக சாதனை!! title=

கோவை: தமிழகத்தை சேர்ந்த 4 வயது சிறுவனின் விளையாட்டுத் திறமை நோபல் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது.

கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த, விதுன் நவீன்குமார் தொடர்ந்து 5 மணி நேரம் இடைவிடாமல் இரட்டை சிலம்பம் (Silambam Sports Event) சுற்றி  உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

நவீன்குமார், வித்யாஸ்ரீ தம்பதிகளின் 4 வயது மகன் விதுன், தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வருகிறார். கடந்த நான்கு மாதங்களாக சிலம்ப பயிற்சியில் ஈடுபட்ட விதுன், தற்போது இந்த உலக சாதனையை படைத்துள்ளார்.

sports

அந்தப் பகுதியில் சிலம்பம் கற்றுக் கொடுக்கும் பிரகாஷ் என்பவரின் முல்லை தற்காப்பு மற்றும் விளையாட்டு கலை பயிற்சி மையத்தில் பயிற்சியாளர் பிரகாஷ் சிலம்பகலையை கற்றுக் கொடுக்கிறார்.

சிலம்பத்தில் தமிழக சிறுவர்களும் சாதனை படைத்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக அரசு இதுபோன்ற விளையாட்டுகளை ஊக்குவிக்கிறது.

ALSO READ | பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் ஆரிப் கான்

தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனப் பணியிடங்களில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டில் சிலம்பம் விளையாட்டைச் சேர்த்து தமிழக முதலமைச்சர் அரசாணை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்காக தமிழக அரசுக்கு நன்றி சொல்லும் விதமாக சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள மைதானத்தில், அலங்கார  இரட்டை சிலம்பத்தை இரண்டு கைகளிலும் சுமார் 5 மணி நேரம் இடைவெளி இல்லாமல் சிறுவன் விதுன் தொடர்ந்து சுற்றி சாதனை படைத்துள்ளார்.

இவரது இந்த சாதனை நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது மட்டுமல்லாமல் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ | பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி விழாக்களை புறக்கணிக்கும் இந்தியா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News