தூக்க மாத்திரை தரமாட்டியா.. மெடிக்கல் ஓனரை தாக்கும் சிசிடிவி காட்சி

CCTV Footage Viral: குடவாசலில் தூக்க மாத்திரை கேட்டு மாத்திரை கொடுக்காததால் ஆத்திரத்தில் மெடிக்கல் ஓனரை தாக்கும் சிசிடிவி காட்சி

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 4, 2022, 02:55 PM IST
தூக்க மாத்திரை தரமாட்டியா.. மெடிக்கல் ஓனரை தாக்கும் சிசிடிவி காட்சி title=

CCTV Footage Viral: திருவாரூர் மாவட்டம் குடவாசல் நடைபெறுவில் சூர்யா மெடிக்கல் உள்ளது. இந்த மெடிக்கலில் வடவேர் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் மருந்து ஒப்புகை சீட்டு இல்லாமல் தூக்க மாத்திரை கேட்டு தினமும் தொந்தரவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு கடைக்கு வந்த செந்தில் மற்றும் அவரது அண்ணன் மகன் இமயவர்மன் தூக்க மாத்திரை கேட்டு உள்ளார். ஒப்புகை சீட்டு இல்லாமல் தரமாட்டோம் என மெடிக்கல் ஓனர் ரவிகுமார் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த செந்தில் மற்றும் அவரது அண்ணன் மகன் இமயவர்மன் ஆகியோர் மெடிக்கல் ஓனர் ரவி குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து குடவாசல் காவல் நிலையத்தில் மெடிக்கல் ஓனர் ரவிக்குமார் புகார் கொடுத்துள்ளார். அதேபோல் செந்தில் அவரது அண்ணன் மகன் இமயவர்மன் ஆகியோரும் ஒருமையில் திட்டியதாக புகார் கொடுத்துள்ளனர். இவர்களின் புகாரின் அடிப்படையில் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அந்த வீடியோ காட்சியில், மெடிக்கல் கடையில் கடையின் உரிமையாளர் மற்றும் அவருடன் ஒரு இளம்பெண்ணும் நின்றுக்கொண்டு இருக்கிறார்கள். அப்பொழுது அங்கு இரண்டு நபர்கள் வருகிறார்கள். எந்தவித பேச்சுவாரத்தையும் இல்லாமல், உடனே கடையின் உரிமையாளரை ஓங்கி அறைந்து சரமாரியாக தாக்குகிறார் மஞ்ச சட்டை  நபர். இதைப்பார்த்து பயந்த இளம் பெண் என்ன செய்வதென்று தெரியாமல் நடுக்கத்துடன் காணப்படுகிறார்.

மேலும் படிக்க: நாய் குரைத்ததால் ஆத்திரத்தில் இரும்பு கம்பியால்.. பதற வைக்கும் CCTV காட்சிகள்

கடையின் உரிமையாளரும் அவரை தாக்குகிறார். இப்பொழுது இரண்டு நபர்களும் (மஞ்ச சட்டை மற்றும் வெள்ளை சட்டை) சேர்ந்து உரிமையாளரை வெளியே இழுத்துக்கொண்டு போய் கடுமையாகத் தாக்குகிறார்கள். கடையில் இருக்கும் இளம் பெண் மற்றும் மற்றவர்கள், சண்டை வேண்டாம் எனக்கூறி சமாதனம் செய்ய முயல்கிறார்கள். ஆனாலும் அந்த இரண்டு நபர்களும் ஓனரை தாக்கிய வண்ணம் உள்ளனர்.

அப்பொழுது அக்கம் பக்கத்தினர் வந்து சண்டை கட்டுப் படுத்துகின்றனர். அங்கு கூட்டம் கூடுகிறது. தாக்கவந்த இருவரில் மஞ்சை சட்டை அணிந்திருப்பவர் அங்கு கூடியிருந்தவரிடம் ஏதோ சொல்கிறார். அவர் பேசிக்கொண்டு இருக்கும் போதே கடையின் உரிமையாயாளரை நோக்கி விரலை நீட்டி "உன்ன தொலைச்சிடுவேன் தொலைச்சி" வடிவேலு பாணியில் மிரட்டவும் செய்கிறார். இந்த வீடியோ காட்சியை நீங்களும் பாருங்கள். வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்

மேலும் படிக்க: பேருந்தில் இருந்து கொட்டிய பண மழை - நடுரோட்டில் அள்ளிய பொதுமக்கள்.!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News