சின்னக்கலைவாணர் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் நகைச்சுவை நடிகர் விவேக். வெறு நகைச்சுவையை மட்டும் செய்யாமல் அதன் மூலம் முற்போக்கான கருத்துக்களையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தவர். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார்.
இந்தச் சூழலில் சமீபத்தில் விவேக்கின் மனைவி அருள்செல்வி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார். அப்போது விவேக் வாழ்ந்து இல்லம் அமைந்திருக்கும் சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டுமென கோரிக்கை வைத்தார். அருள்செல்வி கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டுமென ரசிகர்களும் கூறிவந்தனர்.
இந்நிலையில் சாலைக்கு விவேக் பெயர் சூட்டுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறுகையில், “ நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வியின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விவேக் வசித்த தெருவுக்கு அவரது பெயரை சூட்டி அரசாணை வெளியிட உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | ‘விக்ரம்’ படத்தில் கமல்ஹாசனுக்கு ஷான்வி ஜோடியானது எப்படி?!
மே மாதம் மூன்றாம் தேதி விவேக் பெயர் கொண்ட தெருவின் பெயர் பலகை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது” என்றார். விவேக் மனைவியின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ரசிகர்கள் தங்களது நன்றியை சமூக வலைதளங்களில் தெரிவித்துவருகின்றனர்.
மேலும் படிக்க | நான் பான் மசாலா ஹீரோ இல்லை பான் இந்தியா ஹீரோ - மாஸ் காட்டிய யஷ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR