சசிகலா கபட நாடகம் ஆடுகிறார்- ஓ. பன்னீர்செல்வம்

மதுசூதனனை வரவேற்று தமிழக முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசினார், அபோது:-

Last Updated : Feb 9, 2017, 02:34 PM IST
சசிகலா கபட நாடகம் ஆடுகிறார்- ஓ. பன்னீர்செல்வம்  title=

சென்னை: மதுசூதனனை வரவேற்று தமிழக முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசினார், அபோது:-

நம்முடன் வந்துள்ள மதுசூதனனை நான் வரவேற்கிறேன். பல அச்சுறுத்தலுக்கு மத்தியில், அவர் எம்.ஜி.ஆர்., உடன் இணைந்து அதிமுகவை வளர்க்க பாடுபட்டவர் மதுசூதனன். 

சில நாட்களாக நடந்த விபரங்களை தெரிவிக்காவிட்டால், ஜெயலலிதாவின் ஆத்மா நம்மை மன்னிக்காது என்ற சூழ்நிலை ஏற்பட்ட போது, வந்தது தான் இந்த அறப்போராட்டம். 

ஜெயலலிதா மரணமடைந்த நிலையில் மதுசூதனன் பொது செயலாளராக வேண்டும் என பரிந்துரைத்தேன். இதனை ஏற்றுக்கொண்ட பின்னர் தான் நான் முதல் அமைச்சராக பதவியேற்று கொண்டனர். 

ஆனால் உறுதிமொழிக்கு மாறாக சசிகலா பொது செயலரானார். இதனை பற்றி அவரிடம் கேட்ட போது, அவர் அளித்த உத்தரவாதத்தை நம்பினோம். ஆனால் அவர் துரோகம் செய்துவிட்டார். 

முதல் அமைச்சர் ஆக வேண்டும் என கபட நாடகம் ஆடி, அமைச்சர்களை தூண்டிவிட்டு பேட்டி கொடுத்தனர். நான் நாடகம் ஆடுகிறேன். துரோகம் செய்வதாக பேட்டி கொடுக்கின்றனர். ஆனால், யார் துரோகம் செய்தனர், கபட நாடகம் ஆடுகின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்கள், நாடகம் செய்தனர், துரோகம் செய்தனர் என்பதற்கு சாட்சி அவர் ஜெயலலிதா எழுதிய மன்னிப்பு கடிதம் காட்டி கொடுக்கும் எனக்கூறினார்.
 
சசிகலா ஜெயலலிதாவிற்கு எழுதிய மன்னிப்பு கடிதத்தை வாசித்து காட்டிய பன்னீர்செல்வம், ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்யவில்லை என சசிகலா கூறினால், அவர் பொய் சொல்கிறார் என அர்த்தம். ஜெயலலிதாவின் நோக்கத்தை செயல்படுத்தவே இந்த அறப்போராட்டம். நாங்கள் யாரையும் அழைத்து வரவில்லை. அவர்களாகவே இங்கு வந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் மதுசூதனன் நிருபர்களிடம் கூறியதாவது:-

புரட்சி தலைவரால் உருவாக்கபட்ட அதிமுக காப்பாற்றபடவேண்டும். கழகத்தின் பொருளாளராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் கழகத்தின் தலைமை ஏற்க வேண்டும். ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றவர் ஓ.பன்னீர்செல்வம். யாருடைய நிர்பந்தமும் இன்றி ஓ.பன்னீர் செவத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறேன். ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கருதுகிறேன். சசிகலாவை அதிமுகவினர் நிராகரிக்க வேண்டும்.

Trending News