நடிகர் விஜயுடன் நாங்கள் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம் - எம்பி ரவீந்திரநாத்

தமிழக வெற்றிக் கழகத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயார் என தேனி எம்பி ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 28, 2024, 02:53 PM IST
  • ரவீதர்நாத் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
  • 37 பணிகள் நடந்து வருகிறது.
  • 403 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நிறைவேற்றப்பட்டது.
நடிகர் விஜயுடன் நாங்கள் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம் - எம்பி ரவீந்திரநாத் title=

தேனி பாராளுமன்ற தொகுதி எம்பி ஓ.பி ரவீந்திரநாத் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக செய்தியாளர் சந்திப்பை நடத்தினார் அதில் பேசிய அவர் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீதர்நாத் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். 

மேலும் இது வரை தொகுதி மேம்பாட்டு நிதி 17,07,9,1088 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது 159 பணிகள் நிறைவேற்றப்பட்டு ,அதில் 127 பணிகள் முடிக்கப்பட்டது, 37 பணிகள் நடந்து வருகிறது. தேனி - மதுரை ரயில் பாதை திட்டம் 2010ஆம் ஆண்டு முதல் 2019 வரை சுமார் 403 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நிறைவேற்றப்பட்டது.

போடி - சென்னை இடையே மாதத்திற்கு 13 முறை ரயில்கள் இயக்கப்பட்டு 2 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மேலும் மின்சார ரயில் திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு செலவு செய்யப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டத்தில் கேந்திர வித்யாலயா பள்ளி அமைக்க 24 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு வட வீரநாயக்கன்பட்டியில் 8 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஜல் ஜீவன் திட்டத்தில் 106.20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைவருக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ நிவாரண நிதி 3 கோடியே 32 கோடி இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனு நிறுத்திவைப்பு! கடும் வாக்குவாதம்..

கிராம சாலைகள் ஆரம்பிக்க 57.39 கோடி ரூபாய் பணிகள் செய்யப்பட்டது. கழிப்பிடங்கள் கட்ட 92.64 கோடி ரூபாய் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெறப்பட்டு நிதி பெற்று இதுவரை 850 கோடி ரூபாய் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்,

திமுக ஆட்சியில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என கூறிவிட்டு தமிழகத்தில் மது கொள்ளை நடந்து வருகிறது. கள்ள சந்தையில் மது விற்பனை அதிகரித்து வருகிறது, மேலும் மணல் கொலை, திமுக ஆட்சியில் போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் டிடிவி தினகரன், ராமநாதபுரம் மாவட்டத்தில் பன்னீர் செல்வம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள். தேனி மாவட்டத்தில் விவசாயிகளுடைய பிரச்சினை காரணமாக மாம்பழ கூழ் தொழிற்சாலை கொண்டுவர பல்வேறு கட்ட முயற்சி மேற்கொண்டு தோல்வி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மூன்றாவது முறையாக பாஜக அரசு வெற்றி பெற்று 400 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழக அரசியலில் மிகப்பெரிய புரட்சி ஏற்படும் என்றார்.

மேலும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர் வாய்ப்பு ஏற்பட்டால் அவர்களுடன் இணைந்து செயல்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார்.

மேலும் படிக்க | டிடிவி தினகரன் மீது தேனியில் வழக்குப்பதிவு: போலீசார் நடவடிக்கை, காரணம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News