எடப்பாடியின் போட்டோவை காட்டி சவால் விட்ட அமைச்சர் உதயநிதி

சசிகலா காலில் விழுந்த போட்டோவை காட்டி பிரசாரம் செய்த உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமிக்கு சவால் விடுத்ததோடு, அந்த சவாலை நிறைவேற்றினால் அரசியலை விட்டே போகிறேன் எனக்கூறி பரபரப்பை கிளப்பினார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 27, 2024, 07:32 AM IST
  • உதயநிதி மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே வார்த்தை போர்.
  • உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
  • எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
எடப்பாடியின் போட்டோவை காட்டி சவால் விட்ட அமைச்சர் உதயநிதி title=

எடப்பாடியை போன்று யாருடைய காலிலாவது நான் விழுந்த போட்டோவை காட்டுங்கள். நான் அரசியலை விட்டே விலகி விடுகிறேன் என்று வேலூரில் சவால் விட்ட விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டு தமிழகத்தில் முதல் கட்டமாக 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19 ந்தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ளது. ஒவ்வொரு கட்சியும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக படுஜோராக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி வேலூரில் உதயநிதி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இடையே வார்த்தை போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. அப்போது பிரச்சாரத்தில் பேசிய விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.,

நான் பிரதமர் மோடியிடம் பல்லை காட்டும் போட்டோவை காண்பித்தால் அவர் நான் மத்திய விளையாட்டு துறை அமைச்சரோடு இருக்கும் போட்டோவை காண்பிக்கிறார் அது கேளு இந்தியா விளையாட்டு போட்டியை சிறப்பாக நடத்தியதற்காக பாராட்டிய போது எடுத்த புகைப்படம் இதற்கு உரிய பதிலை எதிர்க்கட்சித் தலைவர் கொடுத்தே தீர வேண்டும் இல்லை என்றால் விடமாட்டேன் என்றும் பேச்சு.

மேலும் படிக்க | பாஜக என்றால் இந்துத்துவா! குடும்ப அரசியல் கட்சி திமுக! கோவை அதிமுக வேட்பாளர் விமர்சனம்!

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து வேலூர் மாநகர் மண்டித்தெருவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேன் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில் நான் உங்களுக்கு வாக்குறுதி கொடுக்கிறேன். 

எந்த காலத்திலும் தமிழகத்தில் சிஏஏ சட்டம் அமல்படுத்த மாட்டாது. தோல் சார்ந்த தொழில்களுக்கு தேவையான மேம்பாட்டு திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும்.
வேலூர் விமான நிலையம் விரைவில் செயல்பட்டுட்டு வரும், வேலூருக்கு மாம்பழ கூல் தொழிற்சாலை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை மற்ற மாநிலங்களும் பின்பற்றுகிறது. 

நான் காட்டுவது ஏய்ம்ஸ் செங்கல், எடப்பாடி காட்டுவது அவருடைய பல்லு.
அடிக்கல் நாட்டிய கையோடு பல்லைக் காட்டியவர் எடப்பாடி. நான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியின் போட்டோவை காண்பித்ததற்கு பதிலாக நானும் முதல்வரும் டெல்லியில் விளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்த போட்டோவை எடுத்து காட்டிக் கொண்டிருக்கிறார்.

நான் ஒரு விளையாட்டு துறை அமைச்சர் அவர் ஒரு மத்திய விளையாட்டு துறை அமைச்சர் நாங்கள் கேலோ இந்தியா விளையாட்டையும், செஸ் ஒலிம்பிய போட்டியையும் சிறப்பாக நடத்திக் காட்டியதால் பிரதமரும் விளையாட்டுத்துறை அமைச்சரும் எங்களை பாராட்டி சென்றார்கள். நீங்கள் காட்டிய போட்டோ அதுதான். நாங்கள் காட்டிய போட்டோ நீங்கள் பல்லு காட்டியது.

இதற்கு எடப்பாடி பழனிச்சாமி பதில் சொல்லியே ஆக வேண்டும். என்னை ஸ்கிரிப்டை மாற்றி பேச சொல்கிறார் எடப்பாடி, என்னால் ஸ்கிரிப்ட்டை மாற்ற முடியாது நான் சமூக நீதி, சுயமரியாதை, எய்ம்ஸ் பற்றி தான் பேசுவேன்.

எடப்பாடி அவர்களே நீங்கள் ஒரு பச்சோந்தி. மோடியை பார்த்தால் பேச மாட்டீர்கள் காலில் விழுந்து விடுவீர்கள்.

ஓபிஎஸ் இடம் ஒரு மாதிரி, சசிகலாவிடம் ஒரு மாதிரி பேசுவீர்கள். சில நேரம் பேசவே மாட்டீர்கள் (காலில் விழுவீர்கள்). இது போன்று யாருடைய காலிலாவது நான் விழும் போட்டோவை காட்டுங்கள் நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன் என சவால் விட்டு பேசினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

மேலும் படிக்க | பெண்கள் ஒரு முழம் பூ வாங்க கூட மு.க.ஸ்டாலின் கொடுத்த ரூ.1000 பயன்படவில்லை: அதிமுக வளர்மதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News