அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்: வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் வானிலை எப்படி இருக்கும் என்ற தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 27, 2019, 01:25 PM IST
அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்: வானிலை ஆய்வு மையம் title=

சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் வானிலை எப்படி இருக்கும் என்ற தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால், அதன் காரணமாக வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி ஏற்ப்பட உள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கோவை, நீலகிரி மற்றும் தேனி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலூர், விழுப்புரம், கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி, புதுக்கோட்டை, மதுரை, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Trending News