சென்னை மாநகராட்சி இளம் மேயர் தாக்கல் செய்ய போகும் பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்ன?

கடந்த 6 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில், சென்னை மாநகராட்சியில் முதல் இளம் வயது பெண் மேயர் மாநகராட்சி பட்ஜெட்டை வரும் வாரத்தில் தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  

Written by - Sivaraman Karnan | Last Updated : Mar 24, 2022, 05:46 PM IST
  • நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக 153 இடங்களில் வெற்றி.
  • 6 ஆண்டுகளுக்கு பின் மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
சென்னை மாநகராட்சி இளம் மேயர் தாக்கல் செய்ய போகும் பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்ன? title=

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில்  திமுக 153 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை உடன் சென்னை மாநகராட்சியை கைப்பற்றி அசத்தியுள்ளது. சென்னை மாநகராட்சி தலித் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் முதல் முறையாக இளம் வயது முதுநிலை பட்டதாரியான பிரியா ராஜன் சென்னை மாநகராட்சியின் மேயராக பொறுப்பேற்று உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக சென்னை மாநகராட்சி கமிஷ்னர் மாநகராட்சி பட்ஜெட், நிர்வாகம் உள்ளிட்ட பணிகளை கவனித்து வந்தார்.  இந்த நிலையில் 6 ஆண்டுகளுக்கு பின் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. 

chennai

மேலும் படிக்க | ஐடிஐ மாணவிகளுக்கும் ரூ.1,000 உதவித்தொகை..தமிழக அரசு அறிவிப்பு

மாநகராட்சி பட்ஜெட் நிதியாக 4,500 கோடி அளவில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதற்கு முன் சென்னை மாநகராட்சி கமிஷ்னராக இருந்த பிரகாஷ் பட்ஜெட்டை தாக்கல் செய்தார், இதில் வருவாய் வரவு 3081 கோடி அளவிலும், வருவாய் செலவு 3,185 கோடி அளவிற்கும் தாக்கல் செய்தால், இதில் 733 கோடி பற்றாக்குறை நிதியாக தாக்கல் செய்தார், ஆனால் 2 ஆண்டுகளில் வருவாய் செலவினம் அதிகரித்து உள்ளது. இதனால் கூடுதல் நிதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.  கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், இல்லம் தேடி கல்வி, இலவச நாப்கின் வழங்கும் திட்டம், பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், பாலம் ,சாலை விரிவாக்கம், மெரினா ,பெசன்ட் உள்ளிட்ட கடற்கரை மேம்பாடு, கடைகள் ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட இருக்கிறது.

chennai

கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய பிரியா, மழைநீர் வடிகால், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள், கொசு ஒழிப்பு, இலவச நாப்கின் உள்ளிட்ட திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்து இருந்தார்.  மண்டல குழு தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் மார்ச் 30ம் தேதி நடைபெறும் என தெரிவித்து உள்ளார், இந்த நிலையில் 2022-23 நிதியாண்டு மார்ச்31ம் தேதிக்குள் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும், இதனால் வரும் வாரம் பட்ஜெட் தாக்கல் இருக்காலம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் வார்டு வாரியாக நடைபெற வேண்டிய பணிகள், புதிய திட்டங்கள், பழைய திட்டங்களில் நிலை குறித்து நிதித்துறை அதிகாரிகள் தகவல் சேகரித்து வருகின்றனர், மாநகராட்சி கமிஷ்னர் ககன் தீப் சிங் பேடி ஒப்புதலுக்கு பின் நிதி ஒதுக்கீடு செய்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது, சென்னை மக்கள் தங்கள் வார்டு பகுதிக்கான புதிய திட்டங்கள், அறிவிப்புகள் குறித்து ஆவலுடன் காத்து கொண்டு உள்ளனர்.

மேலும் படிக்க | மாணவர்களை அவமதித்தால்..! எச்சரிக்கும் வகையில் நடவடிக்கை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News