சட்டவிரோத பண பரிமாற்றம் வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று மாலை மருத்துவ பரிசோதனைக்காக சிறையில் இருந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கடந்த ஒரு மாத காலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு ஜூலை மாதம் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு புழல் சிறையில் உள்ள மருத்துவர் கண்காணிப்பில் இருந்தார்.
மேலும் உடல் ரீதியான பிரச்சினைகள் இருந்ததால் கடந்த மாதம் சில நாட்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அப்போது ஓமந்தூரார் மருத்துவமனையில் தங்கி ஓமந்தூரார் அரசு மருத்துவர்கள் குழு அவரை முழு பரிசோதனை செய்து உடல் நலம்தேறிய பின்பு மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக செந்தில் பாலாஜிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதாலும், லேசான நெஞ்சுவலி, முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் வலி இருந்ததாலும் மீண்டும் புழல் சிறையிலிருந்து ஸ்டாண்லி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி போலீஸ் பாதுகாப்புடன் நேற்று மாலை அழைத்து வரபட்டுள்ளார்.
அங்கு ரத்தம் பரிசோதனை,இசிஜி, எக்ஸ்ரே உள்ளிட்ட வழக்கமான பரிசோதனைகள் செய்த பின்பு சுமார் ஒரு மணி நேரம் கழித்து அவரை இன்னும் சில பரிசோதனைக்காக ஓமதூரார் அரசு மருத்துவமனைக்கு நேற்று இரவு அழைத்துச் சென்றனர். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ குழுவினர் இருதயவியல் பரிசோதனைகள் செய்யபட்டது. நாளை செந்தில் பாலாஜிக்கு எம் ஆர் ஐ ஸ்கேன் உட்பட பல ஸ்கேன்கள் எடுக்கப்பட உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இன்று முழுவதும் கண்காணிப்பில் வைத்துள்ளனர் இந்து சி டி ஸ்கேன் மற்றும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு... முழு அட்டவணை இதை!
இதனால் இன்று மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்ய வாய்ப்பில்லை என்றும் நாளை வரை மருத்துவர் கண்காணிப்பில் இருப்பார் எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய நிபுணர்கள் நரம்பியல் மருத்துவர்கள் தொடர்ந்து அவரை கண்காணித்து சிகிச்சை அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் உட்பட ஸ்கேன்கள் எடுக்கப்பட்டு மருத்துவர்கள் ஆலோசனைப்படி அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவார் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | சங்கரய்யாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ