தமிழகத்தில் எதிர்கட்சி எங்கே? கனிமொழி குற்றச்சாட்டு

தமிழகத்தில் எதிர்கட்சி எங்கே? அதிமுக தன்னை காப்பாற்றிக் கொள்வதிலே முனைப்பு! கனிமொழி குற்றச்சாட்டு

Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jan 25, 2022, 01:51 PM IST
  • அதிமுக எதிர்கட்சியாக செயல்படவில்லை
  • அதிமுக தன்னை காப்பாற்றிக் கொள்வதிலே முனைப்பு
  • ஆளும் கட்சியாகவும் இருந்த போதும் அதிமுக செயல்படவில்லை என திமுக குற்றச்சாட்டு
தமிழகத்தில் எதிர்கட்சி எங்கே? கனிமொழி குற்றச்சாட்டு title=

சென்னை: தமிழகத்தில் எதிர்கட்சி எங்கே? அதிமுக தன்னை காப்பாற்றிக் கொள்வதிலே முனைப்பு! கனிமொழி குற்றச்சாட்டு

அதிமுக எதிர்கட்சியாக செயல்படவில்லை, அவர்களை காப்பாற்றி கொள்வதிலேயே அக்கறை காட்டிக் கொள்கிறார்கள் என்று திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றம் சாட்டுகிறார்.

சென்னை தரமணியில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நடைபெற்ற புகைப்பட கண்காட்சியை எம்.பி.கனிமொழி பார்வையிட்டார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, அதிமுக தன்னை காப்பாற்றிக் கொள்வதிலேயே முனைப்பாக இருப்பதாக தெரிவித்தார்.  

மத்திய அரசின் பணிகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளை நியமிக்கும் மசோதா குறித்து கேட்டதற்கு, மாநில அரசின் உரிமைகள் பறிக்கும் எதையுமே நாம் ஏற்க முடியாது என்று உறுதிபட தெரிவித்தார்.

மத்திய அரசு எந்த மசோதா கொண்டு வந்தாலும், அதன் நோக்கம் மாநில உரிமைகளை பறிக்கக்கூடியதாகவே இருக்கிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது நிச்சயமாக கண்டிக்கத்தக்கது. மத்திய அரசின் இந்த போக்குக்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 

ALSO READ | அடுத்த 3 நாட்களில் கொரோனா பாதிப்பின் உண்மை நிலைமை தெரியவரும்: அமைச்சர் மா.சுப்பிரமணியம்

மாணவி உயிரிழப்பு குறித்து கேட்டதற்கு சொல்லும் பதிலே அவர்கள் வேண்டுமென்றே அரசியல் செய்கிறார்கள் என்பதை தெளிவாக கூறுகிறது. ஒரு மாணவி உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தப்பட வேண்டிய ஒன்று. மகளை இழந்து தவிக்கும் குடும்பத்தின் இழப்பை மத அரசியலாக்குவது வருந்தத்தக்க ஒன்று என திமுக எம்.பி கண்டனம் தெரிவித்தார். 

திமுக - பாஜக என்ற நிலை இருக்கா என்று கேட்டதற்கு பதிலளித்த கனிமொழி எம்.பி, இப்போது எதிர்கட்சியாக இருக்கும் அதிமுக அவர்களை காப்பாற்றி கொள்வதிலேயே அக்கறை காட்டி கொள்கிறார்கள். ஆளும் கட்சியாகவும் இருந்த போதும் செயல்படாத அவர்கள், எதிர்கட்சியாகவும் செயல்படவில்லை.

ஆனால் பாஜக எதிர்கட்சியாக செயல்படுவதாக நான் ஏற்றுக்கொள்ளவில்லை.  ஊடகங்கள் வேண்டுமானால் அவர்களை பற்றி பேசலாம்; ஆனால் மக்கள் அவர்களை பற்றி கவலைப்படவில்லை என்பதுதான் உண்மை என்று கனிமொழி தெரிவித்தார்.

ALSO READ | தென் இந்தியாவில் அடி எடுத்து வைத்தது Zee Media: 4 மொழிகளில் செய்தி சேனல்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News