By Elections: ஈரோடு இடைத்தேர்தலில் யார் வேட்பாளர்? விளக்கம் அளிக்கும் ஜி.கே.வாசன்

By Elections Candidates: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரு 27ம் தேதியன்று நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் யார் வேட்பாளர் ஜி.கே.வாசன் விளக்கம் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 19, 2023, 03:00 PM IST
  • ஈரோடு இடைத்தேர்தலில் யார் போட்டியிடுவது?
  • தாமாகா - அதிமுக ஆலோசனை
  • இன்னும் சில நாட்களில் முடிவு ஆகுமா?
By Elections: ஈரோடு இடைத்தேர்தலில் யார் வேட்பாளர்? விளக்கம் அளிக்கும் ஜி.கே.வாசன் title=

சென்னை: மேகாலயா உள்ளிட்ட 3 மாநிலத் தேர்தலுடன், 6 மாநிலங்களில் காலியாக உள்ள, ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளிட்ட 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியையும் இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரு 27ம் தேதியன்று நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக, திமுகவினர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

2021 தேர்தலில் இந்த தொகுதி அதிமுக கூட்டணி சார்பில், தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தமாகா, அதிமுக இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.

சென்னையில், தமாகா தலைவர் ஜி.கே.வாசனுடன், அதிமுக நிர்வாகிகள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, பெஞ்சமின் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை பற்றி பல்வேறு கருத்துகள் வெளியான நிலையில், தமாகா தலைவர் சென்னையில் கருத்து தெரிவித்தார்.

மேலும் படிக்க | KKSSR: தமிழகத்தின் அனுமதி இல்லாமல் தமிழக எல்லையில் கேரள சர்வே பண்ணக்கூடாது

கலந்தாலோசனை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன், " இடைத் தேர்தல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. வெற்றியை உறுதி செய்ய வேண்டியது கூட்டணி கட்சிகளின் கடமையாக உள்ளது என்பதை நாங்கள் அறிந்து உள்ளோம்” என்று தெரிவித்தார்

இதற்காக அதிமுக மூத்த தலைவர்கள் என்னை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். 2 நாட்களுக்கு முன்பு நான் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக சந்தித்து பேசினேன். தேர்தல் அறிவிப்பு வந்த உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். தற்போது அதிமுக தலைவர்கள் உடன் கலந்து பேசி இருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

அதேபோல, கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களின் இலக்கு என்று கூறிய அவர், அதற்கு ஏற்றவாறு ஒரு சில நாட்களில் முடிவை அறிவிப்போம் என்று தெரிவித்தார். கூட்டணி கட்சிகளின் ஒரே நோக்கம் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். வேட்பாளர் யார் என்பது ஒரு சில நாட்களில் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து பேசி அறிவிப்போம்." இவ்வாறு தமாகா தலைவர் ஜி.கே வாசன் கூறினார்.

மேலும் படிக்க | Budget 2023: பட்ஜெட்டில் நுகர்வு செலவினங்களுக்கான வரி தள்ளுபடி பலன்கள் எவ்வளவு?

மேலும் படிக்க: திமுகவுக்கு திரும்புகிறாரா மு.க. அழகிரி... உதயநிதி சந்திப்புக்கு பின் தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News