இளையராஜா கருத்தை ஏன் சில்லறைத்தன அரசியலுக்குப் பயன்படுத்துகிறீர்கள்?- நடிகை கஸ்தூரி காட்டம்

நான் மிகப்பெரிய விஜய் ரசிகை என்பதால் பீஸ்ட் 4 முறை பார்ப்பேன் என்றும்,  மற்றவர்கள் அதனை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 19, 2022, 10:51 AM IST
  • ரசிகர்களுக்காகப் படம் எடுக்காமல் பொதுமக்களுக்காகவும் படம் எடுக்க வேண்டும்
  • தமிழ் மணம் மாறாத கதைகளை ராமராஜன் - இளையராஜா காம்பினேஷன் அளித்தது
  • பேன் இந்தியாவிற்கு தமிழ் கலாச்சாரத்தைக் கொண்டு செல்ல வேண்டும்.
இளையராஜா கருத்தை ஏன் சில்லறைத்தன அரசியலுக்குப் பயன்படுத்துகிறீர்கள்?- நடிகை கஸ்தூரி காட்டம் title=

இளையராஜாவின் வார்த்தையில் உள்ள நல்ல பாசிட்டிவ் கருத்துகளை எடுத்துக் கொள்ளாமல் சில்லறைத்தனமாக அரசியலுக்கு ஏன் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் பல்நோக்கு சமூக மையம் சார்பில் நடைபெற்ற எழுபெரும் விழாவில் அமைச்சர் கே.என்.நேரு, அப்துல் கலாம் ஆலோசகர் பொன்ராஜ், ,திரைப்பட நடிகை கஸ்தூரி மற்றும் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.இவ்விழாவைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: 

''தமிழகத்தில் சக்கை போடு போடும் படங்கள் கன்னடம் மற்றும் தெலுங்கு, மலையாளப் படங்கள்தான். தெலுங்கிலும் நன்றாக ஓடிய படங்கள் தமிழில் மொழிபெயர்ப்பு நிலை மாறியுள்ளது. தமிழ் சினிமாவும் உலக கண்டென்ட்டுக்கு இணையான கண்டென்ட் கொடுத்தால் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும், கதாநாயகர்கள் மற்றும் விளம்பர உத்திகளைக் கொண்டு படம் எடுத்தால் அதனை மக்கள் நிராகரிக்கிறார்கள். ரசிகர்களுக்காகப் படம் எடுக்காமல் பொதுமக்களுக்காகவும் படம் எடுக்க வேண்டும்.

தமிழில் ஹிட்டடித்த படங்களுக்கு பிற மொழிகளுக்கு ரீமேக் ரைட்ஸ் கொடுத்துவந்த நிலை மாறி, தமிழ் சினிமா பொற்காலம் திரும்பி வரவேண்டும் என்ற நிலையில் இருக்கிறோம். தமிழ் மணம் மாறாத கதைகளை ராமராஜன் - இளையராஜா காம்பினேஷன் அளித்தது. அந்த மாதிரியான படங்கள் திரும்பி வந்தால் நன்றாக இருக்கும். பேன் இந்தியாவிற்கு தமிழ் கலாச்சாரத்தைக் கொண்டு செல்ல வேண்டும். 

மேலும் படிக்க | இளையராஜாவுக்கு எம்.பி பதவி தேவையில்லை காரணம் இதுதான் அண்ணாமலை கருத்து

இளையராஜா மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டுப் பாராட்டியது மிகப்பெரிய சர்ச்சையாக உள்ளது. இளையராஜா தான் நினைத்த நல்ல விஷயத்தைச் சொன்னது அம்பேத்கரை மதிக்கும் மோடியை எதிர்க்கும் கொள்கையுடையவர்கள், கொள்கை ரீதியாக இரு துருவங்களாக இருக்கக்கூடியவர்களால் அரசியலாக்கப்பட்டுள்ளது. சாதி, மதம், சமத்துவ முன்னேற்றம் என எல்லாவற்றையும் பேசுவதற்கு ராஜா சாருக்குத் தகுதி உள்ளது. அவருடைய வார்த்தையில் உள்ள நல்ல பாசிட்டிவ் கருத்துகளை எடுத்துக் கொள்ளாமல் சில்லறைத்தனமாக அரசியலுக்கு ஏன் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்?''

இவ்வாறு நடிகை கஸ்தூரி தெரிவித்தார். 

மேலும் படிக்க |  இளையராஜாவுக்கு எதிராக மகன் யுவன்சங்கர்ராஜா சர்ச்சை பதிவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

 

 

 

Trending News