செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ஸ்டாலின் ஏன் நீக்கவில்லை தெரியுமா? அமித்ஷா சொன்ன காரணம்

திமுகவின் எல்லா ரகசியத்தையும் சொல்லிவிடுவார் என்பதால் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ஸ்டாலின் நீக்கவில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 29, 2023, 07:12 AM IST
  • செந்தில் பாலாஜியை ஏன் நீக்கவில்லை?
  • சிறையில் இருந்து அமைச்சராக தொடரலாமா?
  • முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அமித்ஷா சரமாரி கேள்வி
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ஸ்டாலின் ஏன் நீக்கவில்லை தெரியுமா? அமித்ஷா சொன்ன காரணம் title=

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் ’என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் பாதயாத்திரை செல்ல இருக்கிறார். இதற்கான தொடக்க விழா ராமநாதபுரத்தில் நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு அண்ணாமலையின் பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். பின்னர் விழாவில் பேசிய அவர், " எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் திட்டங்களை செயல்படுத்தவே அண்ணாமலை பாதயாத்திரை செல்கிறார். கடந்த 9 ஆண்டு கால பா.ஜனதா ஆட்சியில் ஒவ்வொரு வீடுகளுக்கும் மத்திய அரசின் திட்டங்கள் சென்றுள்ளது. மக்கள் அடுத்த தேர்தலிலும் மகத்தான ஆதரவை பாரதிய ஜனதாவுக்கு தருவார்கள். மக்கள் நலத்திட்டங்களுக்காக தமிழகத்திற்கு மட்டும் பல ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. தி.மு.க. குடும்ப அரசியல் செய்து வருகிறது. 

மேலும் படிக்க | அப்போது ஊழல்வாதி ஜெயலலிதா, இப்போது ஜெயலலிதா வழியில் ஆட்சி: அமித்ஷா இரட்டை நிலைப்பாடு

எதிர்க்கட்சிகள் கூட்டணி

யு.பி.ஏ அரசாங்கம் பத்து ஆண்டுகால ஆட்சியில் 12 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளது. காங்கிரஸ், திமுக கட்சிகள் வாக்கு சேகரிக்கும்போது, 2ஜி ஊழல் தான் மக்களுக்கு நினைவுக்கு வரும். காஷ்மீர் சிறப்பு பிரிவு 370-சட்டத்திருத்தத்தை நீக்குவதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது.யு.பி.ஏ அரசாங்கம் இலங்கையில் தமிழர்கள் அழித்தொழிக்கப்பட காரணமாக இருந்தார்கள். அவர்களது ஆட்சிக்காலத்தில் தமிழக மீனவர்கள் நிறைய கஷ்டங்களை அனுபவித்தனர். எதிர்க்கட்சிகள் நாட்டை வளர்க்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அவர்களது குடும்பத்தை வளர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். குடும்ப கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணியை அமைத்துள்ளன. அதனால் நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை. அவர்கள் வீட்டுக்குத்தான் நன்மை உள்ளது. 

திமுக அரசு ஊழல் 

சோனியா காந்திக்கு ராகுலை பிரதமராக்க வேண்டும் என்று ஆசை. ஸ்டாலினுக்கு உதயநிதியையும் லாலு பிரசாத் யாதவிற்கு தேஜஸ்வியையும் மம்தாவுக்கு அவரது மருமகனையும் உத்தவ் தாக்ரேவுக்கு அவரது மகனையும் முதல்வராக்க வேண்டும் என ஆசை.நரேந்திர மோடி மட்டுமே இந்தியாவிற்கு நலத்திட்டங்களை வழங்கும் ஆட்சியை நடத்தி வருகிறார். திமுக அரசு உலகிலேயே ஊழல் மிகுந்த அரசாக உள்ளது. தமிழ்நாட்டில் இப்போது நடக்கிற அரசாங்கம் ஊழல் நிறைந்த அரசாங்கமாக இருக்கிறது. உலகிலேயே ஊழல் நிறைந்த அரசாங்கமாக இருக்கிறது. 

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரலாமா?

உங்களுடைய அமைச்சரவையில் ஒரு அமைச்சர் (செந்தில் பாலாஜி) ஊழல் வழக்கில் சிக்கி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவர் சிறையில் இருக்கிறார். ஆனால் அவரை அமைச்சராகத் தொடர வைத்திருக்கிறீர்கள். இது வெட்கக்கேடானது.  சிறையில் இருப்பவர் அமைச்சராக இருக்கலாமா, அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டுமா இல்லையா?. ஸ்டாலின் அவரது ராஜினாமா கடிதத்தை வாங்கமாட்டார். அப்படி வாங்கிவிட்டார் என்றால் அவர் எல்லா ரகசியத்தையும் சொல்லிவிடுவார். இதனால் தான் ராஜினாமா கடிதத்தைப் பெற ஸ்டாலின் மறுக்கிறார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு ட்வீட் போட்டால் உங்கள் ஆட்சியில் பூகம்பம் ஏற்படுகிறது. அவர்கள் பல கோடி ரூபாயில் செய்த ஊழல் இப்போது அம்பலமாகியிருக்கிறது. இந்த ஒரு ட்வீட்டுக்கே திமுக ஆட்சிக்கு நிலநடுக்கம் ஏற்படுகிறது என்றால், அண்ணாமலை 10 ஆயிரம் கி.மீ நடக்கப் போகிறார். அப்படி என்றால் உங்கள் நிலை என்னாவகும் என்று நினைத்துப் பாருங்கள்" என பேசினார்.

மேலும் படிக்க | நாட்டாமை... தீர்ப்பை மாத்தி சொல்லு! ராகுல் காந்தியின் பதவி பறிப்பும் சட்ட விளக்கமும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News