5G Network: 5G நெட்வொர்க் இந்நாட்களில் அதிகம் விவாதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு நாட்டில் 5G நெட்வொர்க்கைத் தொடங்குவது குறித்தும் பேசப்படுகிறது. ஆனால் இன்னும் பெரும்பாலான மக்களுக்கு 5G அம்சத்தின் நன்மைகளைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை. 5G-யின் முக்கிய அம்சங்கள் மற்றும் இதனால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.
பல பெரிய நிறுவனங்கள் 5G சேவைக்கான நடவடிக்கைகளில் முழு முனைப்புடன் ஈடுபட்டுள்ளன. நாட்டில் அடுத்து வரப்போகும் மிகப்பெரிய தொழில்நுட்ப புரட்சி 5G புரட்சியாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது.
இணையம் 100 மடங்கு வேகமாக இருக்கும்
தகவல்களின்படி,
5G நெட்வொர்க் தற்போதைய 4G நெட்வொர்க்கை விட பல மடங்கு வேகமாக இருக்கும். தரவு பரிமாற்றம் 10 மடங்கு முதல் 100 மடங்கு வேகமாக இருக்கும்.
பதிவேற்றுவது சூப்பர்ஃபாஸ்டாக இருக்கும்
5G நெட்வொர்க் வந்த பிறகு, அனைத்து வீடியோக்களையும் சில நொடிகளில்
YouTube அல்லது மற்ற தளங்களில் பதிவேற்றிவிடலாம். இந்த தளங்களில் வீடியோக்களைப் பதிவேற்றுவதற்கு அதிக நேரம் எடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மிகத் தெளிவான வீடியோ அழைப்புகள்
அறிக்கையின்படி, 5G நெட்வொர்க் வந்த பிறகு, உங்கள் வீடியோ அழைப்புகள் இன்னும் சக்திவாய்ந்ததாக இருக்கும். அனைத்து வீடியோ அழைப்புகளிலும் காட்சிகள் மிகத் தெளிவாக இருக்கும்.
ரியல் டைம் வீடியோ கேம்ஸ்
5G நெட்வொர்க்,
PUBG போன்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் கேம்களை விளையாடுபவர்களுக்கு ஒரு வரமாக இருக்கும். 5G நெட்வொர்க்கில் நீங்கள் உயர் வரையறை விளையாட்டுகளை விளையாட முடியும்.
சாலை விபத்துகளின்போது பயன்படும்
இந்நாட்களில் செல்ஃப் டிரைவிங் கார்கள் பற்றியும் அதிகம் பேசப்படுகின்றன. 5G நெட்வொர்க் செல்ஃப் டிரைவிங் வாகனங்களை இணைப்பில் வைக்கும். இதன் மூலம் சாலை விபத்துக்கள் குறிப்பிடத்தக்க வகையில் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR